ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஆசையாக கிளம்பி போய் ஏமாற்றமடைந்தேன் – ஜேம்ஸ் வசந்தன் பதிவு

0
1305
- Advertisement -

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட்,கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் `ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி இன்று சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி:

மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் மழை காரணமாக அரங்கில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் இசை கச்சேரி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருக்கின்றனர். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான், “எனது அன்பான நண்பர்களே… மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி இசை நிகழ்ச்சி வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் பதிவு:

புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து அந்த பதிவின் கீழ் ஒரு ரசிகர், நான் மதுரையிலிருந்து வந்து ரொம்ப ஏமாற்றமடைந்தேன் என்று வருத்தப்பட்டிருந்தார். அதற்கு ஏ.ஆர் ரஹ்மான், “நமது அரசாங்கத்தின் உதவியுடன் இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச அனுபவங்களுக்கான அடுத்த கட்ட உள்கட்டமைப்பு வசதியை சென்னைக்கு உருவாக்குவோம் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜேம்ஸ் வசந்தன் பதிவு:

இதை அடுத்து பலரும் ரகுமானுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஆசையாக கிளம்பி போனேன் ARR இசை நிகழ்ச்சிக்கு. மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது என்று அறிந்து ஏமாற்றம் அடைந்தேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஜேம்ஸ் வசந்தன்குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சுப்பிரமணியம் என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பசங்க மற்றும் ஈசன் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருக்கிறார். அதேபோல் இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

Advertisement