ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்ற காமெடியை அண்ணாமலை படத்தில் பயன்படுத்திய ஜனகராஜ்

0
441
- Advertisement -

மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்ற காமெடியை ஜனகராஜ் அவர்கள் ரஜினியின் அண்ணாமலை படத்தில் பயன்படுத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா துறை திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, காலங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் ஜெய்சங்கர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவருடைய இன்னொரு பெயர் வெள்ளிக்கிழமை நடிகர். காரணம், இவருடைய ஒவ்வொரு படமும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும். இதனால் தான் இவருக்கு இந்த பட்டப்பெயரை சூட்டி இருந்தார்கள். திரையுலகையும், திரையுலகினரையும் இவர் மகிழ்ச்சியாக வைத்திருந்த அளவுக்கு யாரும் வைக்கவில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு திரைத்துறையின் மீது காதல் கொண்டிருந்தவர். பொதுவாகவே, எம்ஜிஆர் படங்கள் வருடத்திற்கு இரண்டுக்கு மேல் போகாது.

- Advertisement -

ஜெய்சங்கர் குறித்த தகவல்:

சிவாஜி நான்கு படங்கள் நடிப்பார். இதனால் பல நூறு திரையரங்களுக்கு வருடம் முழுவதுமே தீனி போட முடியாது என்று சொல்லலாம். ஆனால், அந்த இடத்தை நிரப்பியவர். யார் கால்ஷீட் கேட்டாலும் இல்லை என்றும் மறுக்க மாட்டார். புதுமுக இயக்குனர், புது தயாரிப்பாளர் என யார் வந்து கேட்டாலும் படத்தை நடித்து கொடுத்தார். மேலும், அவர்கள் கொடுத்த காசோலையில் பணம் இல்லை என்றாலும் சரி விடு பாவம் பிழைத்து போகட்டும் என்று சொல்லியும் நடித்துக் கொடுத்திருந்தார். இதனாலே இவரை மக்கள் கலைஞர் என்று தான் அழைத்தார்கள்.

ஜெய்சங்கர் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பில் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேலாவது வெளியாகிவிடும். அதுவும், 1972 இல் ஜெய்சங்கர் கதாநாயகனாக 15 படங்கள் நடித்திருந்தார். இந்த படங்கள் எதுவுமே தோல்வி அடையவில்லை. தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தான் தந்தது. அந்த வகையில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் ஒன்று தான் நவாப் நாற்காலி. இந்த படம் கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

நவாப் நாற்காலி படம்:

இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தார்கள். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காமெடி வசனத்தை தான் ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் பேசி இருக்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, ஜெய்சங்கர் நடித்த நவாப் நாற்காலி படத்தில் விசிட்டிங் கார்டில் நேசமணி பொன்னையா என்ற பெயரில் இருக்கும்.

ஜனகராஜ் பேசிய வசனம்:

அதை ரமா பிரபா, நாசமா நீ போனியா என்று வாசிப்பார். இந்த காமெடியை 20 வருடங்கள் கழித்து 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் அவர்கள் குஷ்புவிடம் பேசி இருப்பார். தற்போது இந்த தகவலை தான் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும், 1972 ஆம் ஆண்டு மார்ச் மார்ச் 3 ஆம் தேதி நவாப் நாற்காலி படம் வெளியாகி இருந்தது. இந்த வருடத்தோடு 51 வது வருடத்தை இந்த படம் நிறைவு செய்திருக்கிறது.

Advertisement