தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாக தாமதமாகிறது. இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஜனநாயகன் பட சர்ச்சை:
இதை அடுத்து சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. அதை தொடர்ந்து முழு படமுமே இணையத்தில் நல்ல பிரண்டிலேயே வெளியாகியிருந்தது. இதற்கு காரணம்
அந்த பதிவில் 'Edit Ref' என்ற வாட்டர் மார்க் போடப்பட்டிருந்தது. ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு அந்த படத்தினுடைய படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. ஆனால், அதற்கும் பிரதீப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று
செய்தியாளர்கள் சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் விளக்கம் அளித்து இருந்தது. இன்று பிரதீப்பை சங்கத்திலிருந்து இடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=a5oqmbg7Jes
தென்னிந்திய சங்கம் அறிக்கை:
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தென்னிந்திய படத்தின் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட
தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. ஜனநாயகன் படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் காரணம் இல்லை. இருந்தாலும் அவரது கவனக்குறைவு இதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
View this post on Instagram
பிரதீப் இடை நீக்கம் :
இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால் சினிமா துறையே செயல் இழந்து போகும் அபாயம் இருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திற்கு இருக்கிறது. திரை துறையின் உடைய பாதுகாப்பு சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17/4/2026 ஆம் ஆண்டு அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று இருந்தது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் முன்னணி படத்தொகுப்பாளர்கள் முன்னிலையில் நடந்த விவாதத்தில் பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் இடைநீக்கம் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.






