யாஷிகாவை தொடர்ந்து யோகி பாபுவுடன் முதன் முறையாக இணையும் அடுத்த பிக் பாஸ் நடிகை.!

0
816
Tharmaraja
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், ஜூலி ஆகியோர் நடிகர்களாக மாறிவிட்டனர். அதே போல இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாமல் இருந்த யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது யோகி பாபு நடித்துள்ள ‘ஜாம்பி ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது யோகி பாபு ‘தர்மபிரபு’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் முத்துகுமரன் இயக்குகிறார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே விமல் – வரலக்ஷ்மி நடித்துள்ள ‘கன்னிராசி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் ஜனனி ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜனனி ஐயர் கமிட் ஆகும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மபிரபு படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

-விளம்பரம்-
Advertisement