ஜனனியின் காதலன் இவ்ளோ பெரிய பணக்காரனா.? ரித்விகாவிடம் பல நாள் ரகசியத்தை உடைத்த ஜனனி.!

0
96
Janani-bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பெண் போட்டியாளர்களில் இதுவரை பெரிதாக பிரச்சனைகளில் சிக்காமல் இருந்து வருவது ஜனனி மற்றும் ரித்விகா தான். இவர்கள் இருவர் தான் பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

bigg boss janani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஜனனி இதுவரை தனது காதல் கதையை பற்றி கூறியதே இல்லை. உண்மையில் இவருக்கு காதலர் இருக்கிறாரா என்பது கூட பல பேருக்கு ஒரு சந்தேகமாகவே இருந்தது வந்தது.ஆனால், உண்மையில் ஜனனனி ஒரு நபரை காதலித்திருக்கிறார். அது கல்யாண பேச்சு வரை சென்றுள்ளது. ஆனால், ஸ்டேட்டஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்துள்ளனர். இதை பற்றி சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் மிட் நைட் மசாலா விடீயோவைல் ரித்விகாவிடம், ஜனனி பேசிக்கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது ரித்விகா யார் அந்த நபர், அவரும் நடிகரா என்று கேட்கிறார். அதற்கு ஜனனனி, அவர் நடிகர் எல்லாம் கிடையாது நார்மல் நபர் தான்.கல்யாணம் வரைக்கும் போய் அப்புறம் நின்னுடுச்சி. அவங்க ரொம்ப ரிச் என்கிறார்,பின்னர் ரித்விகா, ரிச்னா என்ன BMW கார்லா வெச்சிருக்காங்களா என்றதும்.அவங்க ரொம்ப பணக்காரங்க ஆனால், லவ் பண்ணும்போது என்ன பத்தி அவனுக்கு தெரியலையா? என்று கூறுகிறார்.

janani

நாம பசிச்சா சரவண பவன் போவோம், அவங்க பசிச்சா தாஜ் ஹோட்டல் போவாங்க என்று கூறிவிட்டு. செத்தா அவங்க என்ன எடுத்துட்டு போக போறாங்க. ஆனா, ஒரு பொண்ண ஸ்டேட்டஸ்காக வேணானு சொல்லிட்டாங்க என்று மிகவும் வருத்தத்துடன் கூறுகிறார் ஜனனனி. பின்னர் ரித்திகாவும், எல்லாம் நல்லதுன்னு நெனச்சிக்கோ என்று ஜனனிக்கு ஆறுதல் கூறுகிறார்.

Advertisement