உடலை சிக்கென்று காட்ட ஸ்ரீதேவி மகள் செய்த சித்து வேலை – சூட்சமத்தை கண்டுபிடித்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
1745
- Advertisement -

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் பயணத்தார். இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார். தனது கடைசி காலம் இளமையை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ஜான்வி கபூர் திரைப்பயணம்:

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் நெட்ஃப்ளிக்ஸ் படத்திலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோலமாவு கோகிலா. சமீபத்தில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார்கள்.

ஜான்வி நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை இந்தியில் சித்தார்த் சென் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து ஜான்வி இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஜான்விகபூர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜான்வி கபூர் லேட்டஸ்ட் புகைப்படம்:

இப்படி இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பூ போட்ட வெள்ளை நிற ஆடைய அணிந்து செம க்யூட்டான புகைப்படங்களை ஜான்விகபூர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ் குவித்து ஷேர் செய்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

அதாவது, ஜான்வி கபூர் பதிவிட்ட இந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் ஜான்வி பின்னாடி உள்ள நாற்காலியின் கால் வளைந்து இருக்கிறது. அதேபோல் அவருடைய கையும் வளைவாக இருப்பது போன்று இருக்கிறது. இது முழுக்க முழுக்க போட்டோஷாப் செய்து தான் இவர் வெளியிட்டு இருக்கிறார் என்றும் தன்னுடைய உடல் அழகுக்காக இவர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டும் இப்படி போட்டோஷாப் செய்து புகைப்படங்களை வெளியிடுவதா? என்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு இவர் கடுமையான உடற்பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டு வருகிறார். அதெல்லாம் போட்டோஷாப் செய்வதற்கு தானா? என்றெல்லாம் கிண்டல் அடித்து இருக்கிறார்கள்.

Advertisement