இணையத்தில் உலா வரும் மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் – ஸ்ரீதேவி மகள் பரபரப்பு புகார்.

0
3508
- Advertisement -

ஆபாச வெப்சைட்களில் என்னுடைய புகைப்படத்தை மார்ப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்று ஜான்விகபூர் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார். திரையுலகில் கடைசி காலம் இளமை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ஜான்வி கபூர் திரைப்பயணம்:

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் நெட்ஃப்ளிக்ஸ் படத்திலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோலமாவு கோகிலா. சமீபத்தில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார்கள்.

ஜான்வி கபூர் நடிக்கும் படம்:

இந்த படத்தை இந்தியில் சித்தார்த் சென் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்து இருந்தார். இதனை அடுத்து ஜான்வி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஜான்விகபூர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜான்வி கபூர் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் ஜான்வி கபூர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், சமீப காலமாகவே AI தொழில்நுட்பம் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதனால் நான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் பள்ளி பருவத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் போது யாஹூ நிறுவனத்தின் வலைதளத்தில் நானும் நடிகையாக மாற இருப்பதாக செய்தி வந்ததை கண்டு அதிர்ந்து போனேன். எப்போதோ நான் என்னுடைய அம்மா, அப்பா உடன் வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படத்தை சோசியல் புகைப்படத்தை பதிவிட்டு இந்த மாதிரி செய்திகள் வெளியானது.

ஜான்வி கபூர் அளித்த புகார்:

அதோடு அனைத்து ஆபாச இணையதளங்களிலும் என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் என்னுடைய திரை வாழ்க்கைக்கு நிறைய பிரச்சினையாக இருக்கிறது. இது எனக்கு வருத்தத்தையும் அளிக்கிறது. சின்ன வயதிலேயே என்னுடைய அம்மா அப்பா உடன் எடுத்த சில புகைப்படங்கள் இன்று ஆபாச இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்டு பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement