அவசரத்தில் பேண்ட் போட மறந்துட்டீங்களா..? ஸ்ரீ தேவி மகள் அணிந்து வந்த அருவருப்பான உடை..!

0
1822
Jhanvi-kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இயக்குணர் கரண் ஜோகர் இயக்கும் ‘தடக்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஜூலை மாதம் வெளியாக உள்ளது என்று எதிர்பார்க்க படுகிறது.

janvi-Kapoor

ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஜான்வி, மிக பெரிய பிரபலமடைந்து விட்டார். இதனால் ஜான்வி எங்கு சென்றாலும் அவரை மீடியாக்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றனர். அது போன்று சமீபத்தில் ஒரு வித்யாசமான உடையை அணிந்து வந்த ஜான்வியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘என்ன ஜீன்ஸ் போடாமல் வந்துடீங்களா’ என்று ட்ரோல் (கிண்டல்) செய்து வந்தனர். இந்த ட்ரோலை பற்றி ஒரு பிரபல இந்தி பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டது. இதனால் கோபமடைந்த ஜான்வியின் அண்ணன் அர்ஜுன் கபூர், அந்த பத்திரிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வகை சாடியுள்ளார்.

actress janhvi

janvi

சமீபத்தில் இந்த பதிவை கண்டு ஆத்திரமடைந்த அர்ஜுன் கபூர் “2 ட்ரோல், ஒரு கமண்ட் அதுவே ஒரு மிகப்பெரிய பத்திரிக்கைக்கு, ஒரு செய்தியாகி விடுகிறது. இதுபோன்ற ட்ரோல்களுக்கு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் அளித்து, எங்களது பதிலடிக்காக காத்துக்கொண்டிருப்பது கேலிக்கைக்குரியதாக இருக்கிறது”என்று இந்த ட்ரோலை பரப்பிய பத்திரிகையை திட்டித் தீர்த்துள்ளார்.