ஜேசன் சஞ்சய் படத்திற்கு கிடைத்த கிரீன் சிக்னல், விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு

0
330
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. கடைசியாக விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

மேலும் தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலுக்கு சின்ன டான்ஸ் ஆடி இருப்பார் சஞ்சய். அதைத்தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பு படித்து இருக்கிறார். இவர் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜங்ஷன், சிரி, Pull The Trigger உள்ளிட்ட சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சையின் முதல் படம்:

இப்படி ஒரு நிலையில் விஜயின் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. பின் முதல் படமே பிரம்மாண்ட பேனரில் விஜய் மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது இருப்பதை எண்ணி கோலிவுட் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்திருந்தது. தனது முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சஞ்சய் குறிப்பிட்டிருந்தார்.

சஞ்சயின் படம் ரத்து:

சமீபத்தில், இந்த அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இந்தப் படத்தின் அடுத்த கட்ட தகவல் ஏதும் வெளி வராததால் இந்த படத்தை லைகா நிறுவனம் டிராப் செய்தது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜயின் மகன் சஞ்சய் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். இந்நிலையில் சஞ்சய் பிறந்த நாளுக்கு லைகா நிறுவனம் வாழ்த்து தெரிவித்ததில் இருந்து இந்த படம் டிராப் செய்யவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

-விளம்பரம்-

படத்தை உறுதி செய்த லைகா :

மேலும், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என பெரிய படங்களில் இதுவரை கவனம் செலுத்தி வந்தது லைகா நிறுவனம். தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்ததை அடுத்து ஜெய்சன் சஞ்சயின் படத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான பணிகள் தான் விறுவிறுப்பாக நடப்பதாக தெரிகிறது. ஜெசன் சஞ்சய் முழு திரைக்கதையையும் தற்போது எழுதி முடித்து விட்ட நிலையில், படத்தில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின் உட்பட நடிகர்களையும் ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானவுடன் படப்பிடிப்பும் தொடங்கப்படும் என்ன கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் குறித்து:

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் சுஷின் ஷியாம் ஆகிய இதுவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த இருவரில் ஒருவர்தான் இசையமைப்பாளராக பணிபுரிவார் என்றும், அனேகமாக யுவன் சங்கர் ராஜா தான் கமிட்டாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது ஜேசன் சஞ்சய் முதல் படத்தை விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அந்தப் படத்தில் அறிவிப்பு எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement