ஒரு படத்தை இப்படி தான் எடுப்பேன் என்று மனம் திறந்து அட்லீ அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

ஜவான் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால், சிலர் நெகடிவான விமர்சனங்களை கொடுத்து இருந்தார்கள். ஆனால், இந்திய அளவில் இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், நீண்ட நாட்களுக்கு பின்னர் அதிரடியான படம் இந்தியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் இந்த மாதிரியான படங்கள் வெளியாவது ரொம்ப கஷ்டம் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அட்லீ அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் படங்கள் இயக்குவது குறித்து சொன்னது, மக்களுக்கு பல்வேறு தரப்பில் ரசனைகள் இருக்கிறது.

Advertisement

அட்லீ அளித்த பேட்டி:

இதனால் ஒரு படத்துக்குள் பல கதைகள் இருப்பது முக்கியமான ஒன்று. ஜாவான் படத்தை பொறுத்தவரைக்கும் சில பேருக்கு தந்தை- மகன் உறவு பிடித்து இருக்கும், சில பேருக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் பிடித்திருக்கும், சிலருக்கு ஆக்ஷன் பிடித்திருக்கும். ஆகவே, ஏதோ ஒரு வகையில் இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கும். அதுதான் என்னுடைய வேலை. நான் அதை உறுதியாக நம்புகிறேன். ஒரு படத்தை உருவாக்க எனக்கு பல வகையான கதைகள், கதைகளங்கள் தேவை. ஒரு திருவிழாவுக்கு சென்றால் அங்கே ராட்டினம், பெரிய தோசைகள், பலகாரம், பெண்களுக்கு பிடித்த பொருட்கள் என பல வகையான விஷயங்கள் இருக்கும்.

Advertisement

படம் எடுப்பது குறித்து சொன்னது:

வீட்டுக்கு வரும்போது நாம் முழு திருப்தி உடன் சந்தோசமாக இருப்போம். என்னுடைய வேலையும் அதுதான். என்னுடைய படம் உங்களுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கை தர வேண்டும். வீட்டுக்கு செல்லும்போது ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டோம் என்ற ஒரு பொறுப்புணர்வு கிடைக்க வேண்டும். இதுதான் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான என்னுடைய கொள்கை. என்னால் ஒரே ஒரு கதையை வைத்து படம் எடுக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement