அம்மா இருக்கும்போது இத சொல்லி இருந்தா வெளிய நடமாடி இருக்க முடியுமா – KS ரவிக்குமாரை விளாசிய ஜெயக்குமார்.

0
472
KSRavikumar
- Advertisement -

என்றென்றும் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’. இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் வசூலில் சாதனை படைத்தது. காலம் கடந்தாலும் படையப்பா திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் ரிலீஸான போது ரஜினிகாந்திற்கும், ஜெயலலிதாவிற்கும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருந்தது. இப்படி இவர்கள் இருவருக்கும் மத்தியில் சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

ரஜினி-ஜெயலலிதா சண்டை:

இதனால் அவர்கள் இருவரையும் மையமாக வைத்து தான் படையப்பா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த முத்து படம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதன் படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதனுடைய விழா கொண்டாட்டத்தில் தான் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தை குறித்து கே எஸ் ரவிக்குமார் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், படையப்பா படம் வெளிவந்த போது நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை வைத்து தான் எழுதப்பட்டது என்றெல்லாம் சொன்னார்கள்.

நீலாம்பரி ரோல் குறித்து சொன்னது:

அது உண்மைதான். அப்படி ஒரு பிடிவாதமான பெண் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்த போது ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் எழுதினேன். காரணம், அந்த அளவிற்கு ஒரு தைரியமான ஸ்ட்ராங்கான பெண் இந்த கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ரஜினி -ஜெயலலிதா இடையே இருந்த சண்டை மற்ற நாடுகளுக்கு எல்லாம் தெரியாது. ஜப்பானில் படம் வெற்றி பெற்றது என்றால் அதற்கு கதை பிடித்துப் போனதனால் தான். அதேபோல் எடிட்டிங், பாடல்கள் எல்லாமே சேர்ந்தது தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். தற்போது கே எஸ் ரவிக்குமாரின் இந்த பேட்டி அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

இந்நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது, அம்மாவுடைய ஆளுமை, ஆற்றல், அறிவு, திறமை என்ன? என்பதை கே ஸ் ரவிக்குமார் யோசித்திருக்க வேண்டாமா? அவருக்கு உண்மையிலேயே தில் இருந்தால் இதை அம்மா உயிரோடு இருக்கும்போது சொல்லி இருக்கணும். அதை விட்டு இப்போ வந்து சொல்வது கோழைத்தனம். அம்மா இருக்கும்போது இப்படிப்பட்ட கருத்தை சொல்லி இருந்தால் அதற்கு எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று அவருக்கே தெரியும். இத்தனை நாளா ஒளித்து வைத்துக் கொண்டு இப்போ வந்து அம்மாவை நினைத்து தான் நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதினேன் என்று சொல்வதை ஒரு கோழையின் செயலாக தான் தமிழ்நாட்டு மக்களும் பார்ப்பார்கள்.

ஜெயலலிதா பேட்டி:

அம்மாவாக இருக்கட்டும், புரட்சித் தலைவரா இருக்கட்டும் மறைந்த தலைவர்கள் பத்தி பேசுவது நாகரீகம் அற்றது. காட்டுமிராண்டித்தனம், பண்பட்டவங்க இப்படி பேச மாட்டாங்க. முத்து படம் திரும்பவும் ஓடணும் என்பதால் தேவையில்லாத விமர்சனம் செய்து அதன் மூலம் வசூல் அடிக்க நினைக்கிறார்கள். அதற்கு வேறு எதையாவது பேசி இருக்கலாம். தேவையில்லாமல் எதற்கு அம்மாவை இழுக்கணும்? இனிமேலும் அம்மா பத்தி பேசினா நிச்சயம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இதே கருத்தை கே எஸ் ரவிக்குமார் அம்மா இருக்கும்போது சொல்லிவிட்டு வெளியில் நடமாடி இருக்க முடியுமா? அவருடைய இந்த பேச்சை ரஜினியை இந்த நேரம் கண்டிச்சு இருக்கணும். ஆனால், அவர் கண்டிச்ச மாதிரி தெரியவில்லை. கேஸ் ரவிக்குமாருக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் என்று அனல் பறக்க கூடியிருக்கிறார்.

Advertisement