வித்தியாசமான திரைமொழி, தெளிவான அரசியலில் மன்னர் காலக் கதை – `யாத்திசை’ முழு விமர்சனம்

0
1153
- Advertisement -

இயக்குனர் ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாத்திசை. தென்திசை என்ற வார்த்தையை குறிப்பிடுகிறது. இந்த படத்தை கே ஜே கணேஷ் தயாரித்திருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற பாண்டியர்களின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் யாத்திசை படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசை வெல்வதற்காக சேரன் தலைமையில் சோழப்பேரரசு போர் புரிகிறது. அவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி மக்கள் கூட்டமும் துணை நிற்கிறது. இறுதியில் போரில் வன்ற ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டிய பேரரசு சோழக்கோட்டையோடு சேர்ந்து கொள்கிறது. மொத்த தென் திசையும் கைப்பற்றப்படுகிறது. இதிலிருந்து தப்பித்த சில சோழர்கள் காற்றில் மறைந்து வாழ்கிறார்கள்.

- Advertisement -

படத்தின் கதை:

அவர்களில் எயினர் கூட்டமும் இருக்கிறது. மேலும், பாண்டியனை வென்று மீண்டும் சோழ மன்னனின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என்று எயினர் குடியின் கொதி சபதம் போடுகிறார். பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையும் தேடுகிறார். இறுதியில் பாண்டிய மன்னன் ரணதீரனை தோற்கடித்து சோழ அதிகாரத்தை கொதி கையில் எடுத்தாரா? பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். எயினர் இளைஞன் கொதியாக சேயோனும் ரணதீரனாக சக்தி மித்திரனும் தேர்வு செய்திருப்பது படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. இருவருமே படம் முழவதும் தாங்கி செல்கிறார்கள். இயக்குனரின் கதை, கதையை கொண்டு சென்ற விதம் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் தான் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

படம் குறித்த விமர்சனம்:

ஆனால், விறுவிறுப்பான காட்சிகள் இருந்ததால் பெரிதாக சலிப்பு தெரியவில்லை. மேலும், வி எப் எக்ஸ் காட்சிகளில் குறைகள் இருக்கிறது. வெறும் எட்டு கோடி பட்ஜெட்டில் இந்த அளவிற்கு பிரமாதமான படத்தை கொடுத்த இயக்குனர் தரணிக்கு ஒரு பாராட்டு தான். செட்டு போட்டு பிரம்மாண்டத்தை காட்டாமல் மேக்கிங் மூலமாக பிரம்மாண்டத்தைக் காட்டி அற்புதப்படுத்தி இருக்கிறார். படத்தினுடைய வசனமும் பிரமாதமாக இருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டு என்பதால் அப்போது வாழ்ந்த மக்கள் பேசிய தமிழை படத்தில் காண்பித்திருப்பது சிறப்பாக இருக்கிறது. ஆனால், இது பார்ப்போருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. சண்டை காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக உள்ளது. ஆடி வடிவமைப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தையும் சரியாக தேர்வு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் சினிமா விரும்பிகளுக்கு யாத்திசை ஒரு நல்ல படமாக அமைந்திருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

கதைகளம் அருமை

சண்டை காட்சி, ஒப்பனை, எடிட்டிங் எல்லாம் வேற லெவல்

எட்டு கோடி பட்சத்தில் பிரம்மாண்ட படம்

குறை:

சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

வி எஃப் எக்ஸ் காட்சிகளில் குறை

படத்தில் சில இடங்களில் வசனம் புரியவில்லை.

மொத்தத்தில் யாத்திசை – பாண்டவர்களின் பெருமை கூறும் ஒரு பிரம்மாண்டம்

Advertisement