ஜெயக்குமாரின் மருமகன் மண்டபத்தில் லிப்ட் விழுந்து விபத்து – மாணவன் பலி. ஷாக்கிங் புகைப்படம்.

0
307
jayakumar
- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் மண்டபத்தில் நடந்த விபத்தால் பதினோராம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் அவரது மருமகன் நவீனுக்கு சொந்தமான மீன் வலை உற்பத்தி தொழிற்சாலை (JFN) உள்ளது. இது பல வருடங்களாக இந்த இடத்தில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகாமையில் லிப்ட் வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஜெ.எஃப் .என் என்ற திருமண மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தான் இந்த திருமண மண்டபத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து இருந்தார். அதனை தொடர்ந்து அந்த மண்டபத்தில் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மண்டபத்தில் நடந்த விபத்தால் பதினோராம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ஜெ.எஃப் .என் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து இருந்தது.

- Advertisement -

வேலைக்காக சென்ற பள்ளி மாணவன்:

இந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் வேலைக்காக பலர் பேர் வந்து இருந்தார்கள். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த மாணவன் சீத்தல். இந்த மாணவன் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்தான். இந்த பையனுக்கு 19 வயது ஆகிறது. திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன். இவர் 23 வயது உடையவர். அடுத்து விக்னேஷ் 21 வயது உடையவர். இவர்கள் மூவரும் வரவேற்பு நிகழ்ச்சியின் போது உணவு பரிமாறும் வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்போது மூவருமே லிப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவுடன் பயணம் செய்திருந்தனர்.

லிப்டில் நடந்த விபத்து:

எதிர்பாராதவிதமாக லிப்டின் இரும்பு ரோப் பாரம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்து மாணவன் சீத்தல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். அவரோடு லிப்டில் பயணம் செய்த திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன், விக்னேஷ் ஆகிய இருவரையும் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்ய அனுமதித்தனர். பின் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்த பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

-விளம்பரம்-

உயிர் இழந்த மாணவன்:

தலை நசுங்கி உயிரிழந்த மாணவனின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்வு நடைபெற்று வரும் சூழலில் குடும்ப வறுமை காரணமாக மாணவன் வேலைக்காக வந்து இருக்கிறான். ஆனால், வந்த இடத்தில் மாணவன் அநியாயமாக உயிரை விட்டு இருக்கிறார். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து லிஃப்ட் அறுந்து விபத்துக்குள்ளான திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணை:

அதில் முதல் கட்ட விசாரணையில் லிப்டு உபகரணங்கள் அனைத்தும் சீனா நாட்டு தயாரிப்பு என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து தனியார் திருமண மண்டபம் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இதே போன்று மீஞ்சூர் தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஐந்துபேர் லிப்ட் கம்பி அறுந்து படுகாயம் அடைந்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement