ஜெயம் ரவியின் 25 வது படம்.! மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.!

0
212
Jayam-Ravi

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவி ஒரு சில புகைப்படங்களையும் கொடுத்துள்ளார். மேலும் இதுவரை 24 படத்தில் நடித்துள்ளார்.

Image result for jayam ravi

ஒவ்வொரு நடிகருக்கும் 25-ஆவது படம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் ஜெயம் ரவியின் 25வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டு வந்தது. தற்போது ஜெயம் ரவியின் 25ஆவது படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்குனர் லக்ஷ்மன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஜெயம் ரவியின் 25 வது படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளார்.

Jayam Ravi's next film JR25 by HMM movies directed by Lakshman official announcement

இந்த படத்தை ஜெயம் ரவியின் உறவினரான சுஜாதா விஜயகுமாரின் தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சுஜாதா விஜயகுமார் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ‘ஜெயம் ரவி 25’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.