மலேசிய கலை நிகழ்ச்சியில் விபரிதம் , பிரபல நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி !

0
3354
Aari

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் தமிழ் திரை கலைஞர்கள் அனைவரும் மலேசியா சென்றுள்ளனர். அங்கு சென்று ஒட்டு பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.
Aari actorமேலும், பிரபல நடிகர்களை வைத்து கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுக்களை விளையாடினர். இதன் மூலம் கிடைக்கும் நிதியையும் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உபயோகப்படுத்த உள்ளனர்.

ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கேப்டனாக இரு அணிகள் பிரிக்கப்பட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அதர்வா அணிக்காக ஆடிய ஆரி கோல் போட முயன்றார். ஆனால், ஆர்யா அணியை சேர்ந்த இரு நடிகர் அவரை தடுக்க வந்தபோது ஆரிக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Aaryaமேலும், மலேசியா சென்றவுடன் நடிகர் ஜெயம் ரவிக்கு தீராத கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.