காதலிக்க நேரமில்லை படத்தில் போஸ்டரில் ஹீரோவின் பெயருக்கு முன்னால் ஹீரோயின் பெயர் வந்ததற்கான காரணம் குறித்த கேள்விக்கு நித்யா மேனன்- ஜெயம் ரவி அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் பிரதர். இந்த படத்தை இயக்குனர் படம் ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சீதா, பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
ஜெயம் ரவி பற்றிய தகவல்:
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் வெற்றி பெறவில்லை. இதை அடுத்து தற்போது ஜெயம் ரவி அவர்கள் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். காதலர் தினத்திற்கு ரிலீஸ் ஆக இருந்த படம் திடீரென ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. தற்போது அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காதலிக்க நேரமில்லை படம்:
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்கள். அப்போது படத்தின் போஸ்டரில் ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னாலே நித்யா மேனனின் பெயர் இருந்தது. அது மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் நித்யாமேனனின் பெயர் தான் முதலில் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு நித்யா மேனன், இது பெரிய விஷயம்தான்.
https://www.youtube.com/watch?v=_BSRrhTpGTc
நித்யா மேனன் சொன்னது:
அதோடு இது நல்ல விஷயமும் கூட. என்னதான் சினிமாவில் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தாலும் நடிகைகள் பெயர்களை முதலில் போடுவது குறித்து யாருமே யோசிப்பதில்லை. நான் இதற்கு முன்பு பெண் இயக்குனர் உடன் பணியாற்றியிருந்தேன். ஆனால், இப்போதுதான் இது நடைபெற்றிருக்கிறது. ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் சினிமாவிலும் ஆண் அதிகம் இருக்கிறது. இந்த விஷயத்தை சொன்னதுமே ஜெயம் ரவி ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். ஜெயம் ரவியுடன் சேர்ந்து படம் பண்ணனும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு இந்த படத்தின் மூலம் சாத்தியமாகி இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

ஜெயம் ரவி சொன்னது:
இதை அடுத்து பேசிய ஜெயம் ரவி, நான் முதன்முதலாக ஒரு பெண் இயக்குனருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதுவரை எனக்கு இருந்த பார்வையை அவர் மாற்றிவிட்டார். எப்போதுமே ஒரு ஆணினுடைய பார்வையில் இருந்து தான் அனைத்தையும் பழகி பார்த்திருக்கிறேன். எனக்கு பெண்ணின் பார்வையை குறித்து கிருத்திகா உதயநிதி தான் சொல்லிக் கொடுத்தார். ஏ.ஆர். ரகுமான் சாருடன் மீண்டும் இணைந்து இணைந்தது ரொம்ப சந்தோஷம். அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். நான் இப்போது நான்கு படங்களில் பணியாற்றி விட்டேன். என்னுடைய பெயருக்கு முன்னால் நித்தியா மேனன் பெயர் வந்ததற்கு காரணம் நான் முதன் முதலாக ஒரு பெண் இயக்கனுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என்பது தான். அவர்கள் மீது எனக்கு உள்ள மரியாதையும் ஒரு காரணம் என்று கூறியிருக்கிறார்.






