ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை சோசியல் மீடியாவில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ஜெயம் ரவி -ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

மேலும், இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொளி மூலமும் ஆஜராகி இருந்தார்.
ரவி-ஆர்த்தி விவாகரத்து:
அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் தான் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 'சமரச தீர்வு' மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கூறியிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமரச தீர்வு மையம் குறித்து வழக்கறிஞர் கூறியிருப்பது, ஒரு பிரச்சனைக்கு இரண்டு வகையான தீர்ப்பு இருக்கிறது. ஒன்று சட்டரீதியாக வழக்காடி தீர்ப்பு பெறுவது. இன்னொன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பு காண்பது. சமரச பேச்சுவார்த்தை என்பது சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் ஒரு அமைப்பின் பெயர்.

சமரச தீர்வு:
ஒரு வழக்கினுடைய இரு தரப்பினருமே சமரசமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவார்கள். அவர்களை நீதிமன்றம் சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கும் அல்லது நீண்ட நாளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளையும் தீர்வு காணுவதற்கும் அனுப்பி வைக்கும் இடம் ஆகும். இந்த மையத்தில் சிறப்பு பயிற்சியில் சேர்ந்த வழக்கறிஞர்கள், பல்வேறு துறைகளில் சிறப்பு தகுதி பெற்ற சமரச நிபுணர்கள் தான் இருப்பார்கள். ஒவ்வொரு வழக்கிற்குமே சமரசம் பேசுவதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் அல்லது இருவர் இருப்பார்கள்.
https://www.youtube.com/watch?v=Yz4fK_gLnMw
வழக்கறிஞர் பேட்டி:
பின் இரண்டு தரப்பினரிடம் சமரசம் செய்வதற்கும் முயற்சிகளை செய்வார்கள். தேவைப்பட்டால் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி வழக்கறிஞர்களையும் இந்த சமரசம் முயற்சிக்கு உதவ அழைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இருவருமே இந்த சமரசம் மையத்திற்கு செல்வதற்கு சம்மதம் சொன்னால் மட்டும்தான் அனுப்பி வைப்பார்கள். சம்மதம் இல்லை என்றால் எந்த வழக்கையும் சமரச மையத்திற்கு அனுப்ப மாட்டார்கள். இந்த மையத்திற்கு செல்வதற்கு யார் யாரையும் நிர்பந்திக்க முடியாது.

ரவி-ஆர்த்தி விவகாரம்:
ரவி- ஆர்த்திக்கிடையே சமரசத்திற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கு சமரசம் செய்ய உதவி செய்வார்கள். ஒருவேளை ஆர்த்தி-ரவி மனமுவந்து சமரசமாக போகிறார்கள் என்றால் அதை நீதிமன்றத்திற்கு தீர்ப்பாக அனுப்பி வைப்பார்கள். ஒருவேளைக்கு சமரசம் முயற்சி தோல்வி அடைந்தால் தோல்வி அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதை அடுத்து நிலுவையில் உள்ள அவர்களுடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஜெயம் ரவி- ஆர்த்தி வழக்கில் நிரந்தர ஜீவானந்தம் குறித்து தீர்வு காண முடிந்தால் சீக்கிரமாக வழக்கு முடிந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.






