18 கிலோ குறைத்துள்ள ஜெயம் ரவி.! வெளியானது கோமாளி படத்தின் பர்ஸ்ட் லுக்.!

0
775

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி, சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி ரஷி ரஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘அடங்காமறு ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 

தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜெயம் ரவி 18 கிலோவை குறைத்துள்ளார்.

இதையும் படியுங்க : தோனி பட நடிகையின் முன்னாள் காதலர் நடிகருடன் ஓரின சேர்க்கை.! வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!

- Advertisement -

இந்த படத்தை குறும் பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சற்று முன்னர் வெளியாகியுள்ளது. அதில் மனநோய் பாதிக்கப்பட்ட நபராக வித்யாசமான கெட்டப்பில் உள்ளார் ஜெயம் ரவி. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement