மீண்டும் டபுள் ஆக்ஷனில் ஜெயம் ரவி, மீண்டும் தன் படத்தின் இயக்குனருடன் அடுத்த படம். யார் தெரியுமா ?

0
569
jayamravi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர், அண்ணன் இயக்குனர் ஆவார். 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும் சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. மேலும், இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தில் ஜெயம் ரவி உடைய கதாபாத்திரம் எல்லாம் படமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் படம்:

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கல்யாண கிருஷ்ணன்- ஜெயம் ரவி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தற்காலிகமாக ‘ஜேஆர் 28’ என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

‘ஜேஆர் 28’ கதை:

இதற்கு முன்பு ஜெயம் ரவி அவர்கள் நிமிர்ந்து நில், ஆதிபகவான் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஆக்ஷன் திரில்லர் காட்சியில் பாணியில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ப்ரியா பவானி சங்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

பிற நடிகர்கள் தகவல்:

மற்றொரு கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் கருப்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement