இந்த முன்னாள் இந்திய கிரிக்கெட்டரோட Biopicல நடிக்க வாய்ப்பு கெடச்சா நிச்சயம் பண்ணுவேன் – ஜெயம்ரவி

0
716
jayamravi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இவர் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில், தனி ஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பூமி. இந்த படம் விவசாய பிரச்சனையை மையமாக கொண்ட கதை. இருந்தும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். மேலும், இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

கல்யாண கிருஷ்ணன்- ஜெயம் ரவி கூட்டணி:

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

-விளம்பரம்-

ஜெயம் ரவி அளித்த பேட்டி:

இதனை தொடர்ந்து தற்போது கல்யாண கிருஷ்ணன்- ஜெயம் ரவி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தற்போது தற்காலிகமாக ‘ஜேஆர் 28’ என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் கிரிக்கெட் பத்தியும், பயோபிக் படம் குறித்தும் பல விஷயங்கள் கேட்கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் குறித்து சொன்னது:

அதற்கு ஜெயம் ரவி கூறியிருந்தது, எனக்கு பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டில் அதிக ஆர்வம். நான் வாலிபால் கேப்டன், புட்பால் கேப்டன், கிரிக்கெட் கேப்டன். எல்லா விளையாட்டிலும் விளையாடுவேன் ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம். ஜாவ்லின் விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளியில் ரெக்கார்ட் எல்லாம் இருக்கிறது. அதேபோல் கிரிக்கெட்டும் ரொம்ப பிடிக்கும். ரசிகர்கள் கூட நீங்கள் பார்ப்பதற்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மாறி இருக்கிறீர்கள். அவருடைய பயோபிக் பண்ணுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணுவேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement