தமிழில் ஒரே படம் தான், இப்போ ஓஹோனு வாழ்க்கை. ஜெயம் ரவி பட நடிகை வாங்கிய புதிய கார்.

0
109065
Nidhi-Agarwal
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நிதி அகர்வால். நடிகை நித்தி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை. இந்த சமயத்தில் தான் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஐஸ்மார்ட் சங்கர்” என்ற படம் உருவானது. இந்த படத்தில் ஹீரோவாக ராம் நடித்து இருந்தார். அதோடு கதாநாயகியாக நிதி அகர்வால் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

-விளம்பரம்-

அதோடு தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூலில் ஆந்திராவை அதிர வைத்தது என்று சொல்லலாம். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்தப் படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து உள்ளார். தற்போது நடிகை நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு உள்ளார். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் தான் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் “பூமி”. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட்டில் முன்னணி நடிகை நித்தி அகர்வால் நடித்து உள்ளார் .

இதையும் பாருங்க : வெறித்தனமான ரீ- என்ட்ரி கொடுத்து பலரையும் சுத்தலில் விட்ட அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்.

- Advertisement -

கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து உள்ள படம் பூமி. மேலும், பூமி படத்தை தொடர்ந்து நடிகை நித்தி அகர்வால் தெலுங்கில் இன்னொரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சமயத்தில் நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ள வீடியோ ஒன்று சக நடிகைகளின் வயிற்று எரிச்சலை கிளப்பி உள்ளது என்று சொல்லலாம். அப்படி என்ன செய்தார் என்ற பார்த்தால்.. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு உள்ள போர்ச்சே என்ற சொகுசு காரை நடிகை நிதி அகர்வால் வாங்கி உள்ளார்.

Image result for nidhi agarwal new porsche cars

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் அவ்வளவு விலை உயர்ந்த சொகுசு கார் ஓட்டுவது போன்று வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு படம் ஹிட்டானால் போதுமே சினிமா பிரபலங்கள் சொகுசு கார் வாங்குவது வழக்கமான ஒன்று தான் என்று ரசிகர்களும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில பேர் நிதி அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

Advertisement