கலைஞர் தாத்தாவுக்காக ஜெயம் ரவி மகன் செய்த செயல்.! நெகிழ்ச்சியான தருணம்.! புகைப்படம் இதோ

0
1316
Kalaingar
- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த செய்வாய் கிழமை (ஆகஸ்ட் 7 ) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவியின் மகன்கள் இருவரும் கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்திய புகைப்படத்தை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

kalainjer

- Advertisement -

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் அவரது முத்த மகன் ஆரவ் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ”டிக் டிக் டிக் ” படத்தில் அவரது மகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இறந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஜெயம் ரவியின் இரண்டு மகன்களும் செய்த செயலை கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கலைஞர் அவர்களின் உடல் நேற்று(ஆகஸ்ட் 8) மாலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

முப்படை மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க கலைஞர் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனை ஆரவ், அயான் ஆகியோர் தொலைக்காட்சியில் பார்த்துக் கண்டிருந்த போது எழுந்து நின்று சலுயூட் செய்து கலைஞர் அவர்களுக்கு மரியாதையை செலுத்தியுள்ளனர்.

 

கலைஞர் அப்போது எடுக்கப்ட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஜெயம் ரவி ‘அவர்களுடைய தாத்தாவிற்கு மரியாதையை செலுத்திய போது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement