இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை குறைக்க ஜெயம் ரவி செய்த விஷயம்.

0
587
jayamravi
- Advertisement -

இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை ஜெயம் ரவி குறைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பூமி. இந்த படம் விவசாய பிரச்சனையை மையமாக கொண்ட கதை. இருந்தும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் படம்:

இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ரிலீசுக்காக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் என்ற படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அகிலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இறைவன், ஜேஆர் 30 போன்ற படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

கோமாளி படம்:

இந்நிலையில் கடுமையாக ஜெயம் ரவி உடல் எடையை குறைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் பள்ளிப்பருவ மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

உடல் எடையை குறைத்த ரகசியம்:

அப்போது அந்த கதாபாத்திரத்திற்காக ஜெயம்ரவி இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை குறைத்து இருந்தார். மேலும், எடையை குறித்த ரகசியத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி கூறி இருந்தார். அதில் அவர், இரண்டு வாரத்திற்கு கேரட் மற்றும் தக்காளியை மட்டும் சாப்பிட்டேன். எப்போதாவது பிளாக் காபி குடிப்பேன். இதன் மூலம் தான் இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடை குறைத்தேன். அதோடு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேறு யாரும் இதை செய்ய வேண்டாம் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

Advertisement