20 கிலோ எடை குறைப்பு.! படத்தின் பெயர்..புகையிலை விளம்பரத்தின் தலைப்பு.! ஜெயம் ரவி அடுத்த படம் இதுதான்.!

0
960
jayam-Ravi
- Advertisement -

`தனி ஒருவன் 2′ படத்தின் கதை விவாத வேலைகளை முடித்த இயக்குநர் மோகன் ராஜா, இப்படத்துக்கான ஆரம்பகட்ட அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். அந்தப் படம் ஜெயம் ரவியின் 25 வது படமாக வெளிவர இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

இதனிடையே சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகவிருக்கும் சங்கமித்ரா படப்பிடிப்புக்குக் காத்திருக்கும் ஜெயம் ரவி, இதற்கிடையில் புதுமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஜெயம் ரவியுடன் முதன்முறையாக நடிக்கவிருக்கிறார் காஜல் அகர்வால். வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்காக 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்திருக்கிறார் `ஜெயம்’ ரவி. `நான்தான் முகேஷ்’ எனத் தலைப்பு வைக்கப் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் திரையரங்குகளில் சுகாதாரத் துறையால் திரையிடப்பட்ட விளம்பரப் படத்தில் இடம்பெற்ற வசனமே `நான்தான் முகேஷ்’ என்பது குறிப்பிடத்தக்கது. மூவி பஃப் நிறுவனம் நடத்திய ஃபர்ஸ்ட் க்ளாப் குறும்பட விழாவின் டைட்டில் வெற்றியாளர் பிரதீப் இப்படத்தை இயக்குகிறார்.

-விளம்பரம்-
Advertisement