மலையாள மொழியி இருந்து நடிகைகள் தான் தமிழில் அதிகம் நடிப்பார்கள் என்று சொல்லுவார்கள். உண்மையிலேயே மலையாள மொழி நடிகர்களும் தமிழ் மொழியில் அதிகம் நடித்து உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜெயராம். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பல குரல் பேசும் கலைஞரும் ஆவார். மேலும், நடிகர் ஜெயராம் அவர்கள் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். அதோடு 90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது.
இவருடைய காமெடி கலந்த நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்தது. தற்போது நடிகர் ஜெயராம் அவர்கள் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமஸ்கிருத மொழியில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ஒரு படத்துக்காக மொட்டை அடித்து உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் நடிகர் ஜெயராம் அவர்கள் உள்ளார். “நமோ” என்ற படம் தான் சமஸ்கிருத மொழியில் உருவாகி வருகிறது.
இதையும் பாருங்க : யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். ஸ்ரீதேவி விருது வாங்கிய நயனின் உருக்கமான பேச்சு.
இந்த நமோ படத்தில் நடிகர் ஜெயராம் அவர்கள் குசேலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜீஷ் மணி என்பவர் இயக்குகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக நடிகர் ஜெயராம் அவர்கள் தன்னுடைய உடல் எடையை 20 கிலோ குறைத்து உள்ளார். மேலும், நடிகர் ஜெயராம் அவர்கள் மொட்டை அடித்து தலைமுடி இல்லாமல் புதிய கெட்டப்பில் மாறி உள்ளார். இந்த படத்திற்காக இவருடைய புதிய கெட்டப் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ஜெயராம் அவர்கள் குசேலன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் இவர் இப்படி உடல் எடையை குறைத்தும் மொட்டை அடித்தும் உள்ளார் என்று பேசப்படுகிறது. மேலும், இந்த படம் ஒன்றரை மணி நேரம் ஓடுமாம்.
அதுவும் இந்த படம் முழுக்க சமஸ்கிருதம் மொழியில் பேசப்பட்டு உள்ளதாம். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழியில் உள்ள நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த லோகநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கிருஷ்ணனுக்கும், குசேலனுக்கும் இடையில் உள்ள நட்பு பற்றி பேசும் படம் தான் நமோ. இதற்கு முன் இயக்குனர் விஜீஷ் மணி அவர்கள் ஸ்ரீநாராயண குரு பற்றி ‘விஷ்வகுரு’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி உள்ளார். அத்துடன் ‘இருள’ மொழியில் ‘நேதாஜி’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இதில் ‘விஷ்வகுரு’ படம் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த விஜீஷ் மணியின் ‘நேதாஜி’ படம் கின்னஸ் சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நமோ படமும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.