யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். ஸ்ரீதேவி விருது வாங்கிய நயனின் உருக்கமான பேச்சு.

0
66568
nayanthara
- Advertisement -

சினிமா துறையை பொறுத்த வரை நடிகைகள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்பது சாதாரணமான விடயம் அல்ல. ஆனால், தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள்.

-விளம்பரம்-

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இறுதியாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நயன் தற்போது சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி தலைப்பில் ‘ஸ்ரீதேவி அவார்டு’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் அளித்தார்.

இதையும் பாருங்க : மாணவியின் சோகத்தை கேட்டு 10 நிமிடம் மேடையில் கண் கலங்கிய சூர்யா. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

விருதை வாங்கி கொண்டு பேசிய நயன், ரசிகர்களின் இந்த அன்பிற்கு நன்றி இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் சமீபகாலமாக நாங்கள் ஜோடியாக சந்தோஷமாக இருக்கும் படங்களை பகிர்ந்து வருவதை பற்றி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். நான் சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்தில் தெரிகிறது. நான் சந்தோஷமாக இருப்பதை விட தற்போது நிம்மதியாக உணர்கிறேன் .அந்த நிம்மதி யாரிடமிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். உங்கள் பெற்றோர், உங்களது வாழ்க்கை துணையாக போகிறவர்கள், என்று யார் வேண்டுமானாலும் அந்த நிம்மதியை கொடுக்கலாம். இந்த ஆண்டு நியூஇயர் ரெசலுயூஷன் என்று எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். எப்போதும் அவர்களின் அன்பு மட்டும் போதும்.

நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அவ்வளவாக வரவில்லை. ஆனால், தற்போது அவ்வாறான படங்கள் வெற்றி பெறும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சமூகவலைதளத்தில் நெகடிவிட்டி அதிகமாக இருக்கிறது, உங்களை பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களை காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும். எனக்கு கடவுள் மீது எப்போதும் நம்பிக்கை அதிகம். யாருமே இல்லாத போது அவர்தான் என்னுடன் இருந்தார். எப்போதும் அனைவரிடமும் அன்பாக இருங்கள் என்பது மட்டும்தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்று கூறியுள்ளார் நயன்.

-விளம்பரம்-
Advertisement