மலையாள மொழியி இருந்து நடிகைகள் தான் தமிழில் அதிகம் நடிப்பார்கள் என்று சொல்லுவார்கள். உண்மையிலேயே மலையாள மொழி நடிகர்களும் தமிழ் மொழியில் அதிகம் நடித்து உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜெயராம். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பல குரல் பேசும் கலைஞரும் ஆவார். மேலும், நடிகர் ஜெயராம் அவர்கள் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார்.
இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். அதோடு 90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது.இவருடைய காமெடி கலந்த நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்தது.
இதையும் பாருங்க : காதல் மனைவிக்கு கவிதை எழுதிய சினேகன் – இப்படி பேசி தான் கரெக்ட் பண்ணி இருப்பார் போல
தற்போது நடிகர் ஜெயராம் அவர்கள் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமஸ்கிருத மொழியில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.இந்த நமோ படத்தில் நடிகர் ஜெயராம் அவர்கள் குசேலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக நடிகர் ஜெயராம் அவர்கள் தன்னுடைய உடல் எடையை 20 கிலோ குறைத்து உள்ளார். இதே போல ஸ்லிம் லுக்கில் தான் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் முன்பு இருந்த உடலில் பாதியை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.