விக்ரமின் சூப்பர் ஹிட் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்த ஜீவா – கடைசில நடிச்சது யார் பாருங்க ?

0
689
jeeva
- Advertisement -

விக்ரம் நடித்த ஐ படத்தில் ஜீவா நடிப்பதாக இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து இவர் ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 2020 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் “சீறு”. இந்த படத்திற்கு இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்து உள்ளார்.

-விளம்பரம்-
நடிகர் ஜீவா மகனா இது.! இப்படி வளந்துட்டாரே..? பாத்தா ஷாக் ஆவீங்க.!  புகைப்படம் உள்ளே! - Tamil Behind Talkies

இந்த படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து இவர் 83 என்ற படத்தில் நடித்து உள்ளார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் “83”. இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை ஆகும். இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும்,

- Advertisement -

83 படத்தில் ஜீவா கதாபாத்திரம்:

1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதையாகும். கபில்தேவ் ஆக இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்து உள்ளார். ஸ்ரீகாந்த் ஆக ஜீவா, மதன்லாலாக ஹர்டி சாந்து, சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் தீபிகா படுகோன், சாகிப் சலீம், ஹார்டி சந்து உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஐ படம் பற்றிய தகவல்:

இதனை தொடர்ந்து தற்போது ஜீவா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரமின் ஐ படத்தில் ஜீவா நடிப்பதாக இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐ. இந்த படம் காதல், அசத்தல், தமிழ் விஞ்ஞான பாணியில் உள்ளது. இந்த படத்தை வேணு ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இது விக்ரமின் 50வது படமாகும்.

-விளம்பரம்-

ஐ படத்தில் ஜீவா:

இந்த படத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, உபென் படெல், ராம்குமார் கணேசன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் உபேன் படேல். இந்த படத்தில் இவர் ஒரு மாடலாக நடித்து இருப்பார். இந்நிலையில் இவருடைய கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ஜீவா தான் நடிக்க இருந்ததாம்.

ஐ படத்தில் ஜீவா நடிக்காத காரணம்:

ஜான் என்ற மாடல் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஜீவாவிடம் படக்குழுவினர் பேசி இருந்தார்கள். ஆனால், அப்போது ஜீவாவின் கால்ஷீட் கிடைக்காததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் உபேன் பட்டேலை படத்தில் ஜான் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர் படக்குழுவினர். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜீவா நடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

Advertisement