தமிழ் படத்தால் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். சர்ச்சையை ஏற்படுத்திய ஜீவா பட நடிகை.

0
8934
honey
- Advertisement -

தமிழ்ப் படங்களில் நடித்த போது மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று மலையாள நடிகை பேட்டி அளித்து உள்ளார். தற்போது இந்த தகவல் இணையங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பாதிப் பேருக்கு மேல் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட மலையாத்தில் இருந்து வந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ். இவர் தமிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின் நடிகை ஹனிரோஸ் அவர்கள் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

-விளம்பரம்-
Honey-Rose

- Advertisement -

மேலும், இவர் தமிழ் படங்களில் நடிக்கும் போது பல துன்பங்களை அனுபவித்து உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். பேட்டியில் அவர் கூறியது, சினிமா உலகில் ஒருவரை ஒருவரை நாம் அறிந்திருப்போம். நமக்கு பல பேர்களை தெரியும். எப்போதும் ஒரு கதையை தேர்வு செய்தாலும், படத்தில் கமிட் ஆனாலும் முதலில் அதை நான் இயக்குனர் வினயன் சாரிடம் தான் சொல்வேன். அவர் எப்படி சொல்கிறாரோ அதன் வழி தான் நான் பின்பற்றுவேன். தமிழில் நான் சில படங்களில் நடித்து இருந்தேன். அந்த நாட்களை என்னால் இப்ப கூட மறக்க முடியாது. அவ்வளவு கஷ்டமான அனுபவங்களை நான் அனுபவித்து இருக்கிறேன். மேலும், என் மேனேஜர் இந்த படத்தில் நடியுங்கள் என்று சொல்வார்.

இதையும் பாருங்க : சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள். நீண்ட வருடம் கழித்து ஒரு நல்ல படம். மேடையில் கண் கலங்கிய பரத்.

அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி படங்களில் நடித்தால் நீங்கள் பெரிய இடத்துக்கு போகலாம் என்பார். அதை நம்பி நானும் கமிட்டாகுவேன். ஆனால், படம் ஆரம்பித்த பின்பு தான் தெரியும் எந்த வகையிலும் உதவாத படம், ஓடாத படம். அதோடு படத்தில் கமிட் ஆகும் போது ஒரு சில பேர் மன ரீதியாக துன்புறுத்த தொடங்குவார்கள். அது மட்டும் இல்லாமல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பலர் தவறான எண்ணத்திலும் பேசுவார்கள். அதோடு மன ரீதியாக நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன்.அது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம் வெளியாகுவது மிகப் பெரிய விஷயம்.

-விளம்பரம்-
Honey-Rose

நான் அந்த அனுபவத்தில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இந்த மாதிரி வந்த பிரச்சனைகளால் தான் என்னால் தமிழ் படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியாமல் போனது என்று கூறியுள்ளார். தற்போது நடிகை ஹனிரோஸ் பேட்டியில் அளித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். ஏற்கனவே நடிகை ஹனி ரோஸ் மலையாள சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் நிலைத்து நிற்கிறது எனவும், நாம் திடமாக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement