சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள். நீண்ட வருடம் கழித்து ஒரு நல்ல படம். மேடையில் கண் கலங்கிய பரத்.

0
10027
bharath
- Advertisement -

இவர் நடித்தால் அந்த படம் ஓடுமா??? என்று பல பேர் விமர்சனம் செய்து உள்ளார்கள் என்று மனவேதனையுடன் பேசி உள்ளார் நடிகர் பரத். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பரத். இவர் நடிப்பு திறன் மட்டுமில்லாமல் நடன திறனும் கொண்டவர். நடிகர் பரத் அவர்கள் பாய்ஸ், செல்லமே, காதல், எம்டன் மகன், வெளியில், பழனி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சில வருடங்களாகவே இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து வந்தது. இதனால் நடிகர் பரத் அவர்கள் ரொம்ப மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடிகர் பரத் நடித்த படம் “காளிதாஸ்”. இந்த படத்தில் பரத் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ளார். மேலும், ஆக்ஷன், திரில்லர், சஸ்பென்ஷன் தோணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Image result for kalidas bharath

- Advertisement -

இந்த படம் கடந்த வாரம் தான் திரையரங்கிற்கு வெளியானது. பின் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றி பரத் வாழ்க்கையில் மிக முக்கியமானது ஆகும். இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றி விழா தற்போது நடைபெற்றது. இதில் பரத் கலந்து கொண்டார். மேலும், வெற்றி விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பரத் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியது, ரொம்ப நாட்களுக்கு பிறகு “வெற்றி நாயகன்” என்ற வார்த்தையை நான் கேட்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் எப்போதும் நல்ல படங்களை மக்களுக்கு தர வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறேன். ஆனால், சில பிரச்சனைகளால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இதையும் பாருங்க : இணையத்தில் கசிந்த பிரியங்கா சோப்ராவின் படுக்கையறை காட்சிகள். பாவம் யா நிக் ஜோனஸ்.

மேலும், நல்ல விமர்சனங்களைப் பெற்றது கடுகு, சிம்பா போன்ற படங்களெல்லாம் வர்த்தக ரீதியாக பெரிய அளவு பிரபலமாகவில்லை. நான் பெரிய அளவில் ஒன்றும் படிக்கவில்லை. 16 வயதிலேயே சினிமாவிற்குள் வந்து விட்டேன். எனக்கு நடனம், நடிப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. இனிமேல் நான் நல்ல கதையில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடிப்பேன். என் வாழ்க்கையில் காளிதாஸ் திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊடகங்கள் மற்றும் பலருக்கும் இந்த படத்தை திரையிட்டு காட்டினோம். மேலும், படத்தை பார்த்து விட்டு பலரும் பாராட்டினார்கள். ஆனால், அதே சமயம் சிலர் பரத்தை வைத்து படம் இயக்குகிறீர்களே, இந்த படம் ஓடுமா?? என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார்கள். ஆனால், இதைப் பற்றி என்னிடம் அவர் பேசவில்லை.

-விளம்பரம்-

இந்த தகவல் எனக்கு மற்றவர்கள் மூலமாக தெரிய வந்தது. இப்படி சொல்லி இருப்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனாலும், சிலவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். சில வருடங்களாகவே என்னுடைய படங்கள் தோல்வியில் இருந்தது. ஒரு திரைப்படத்தை எடுக்கும்போது அந்த திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்பது தான் முக்கியமான விஷயம். கதை சரி இல்லை என்றாலும் அதற்கு நான் தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். மேலும், அடுத்த வாரம் ஹீரோ, தபாங், தம்பி ஆகிய படங்கள் வர போகிறது. இந்த படங்களை கடந்து என் படம் ஓட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று கூறி உள்ளார்.

Advertisement