நீ எல்லாம் அடுத்த ஜென்மத்துல பாம்பா பிறந்த கூட உன்னை வைத்து படம் எடுக்க மாட்ட- ஜீவா சொன்ன ரகசியம்.

0
22167
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகச்சி தான். சமீபத்தில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஜீவா அவர்கள் வருகை தந்து இருந்தார். அவர் அதில் கூறிய விஷயம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியது, நான் ஒரு சின்ன விஷயம் சொல்லுறேன். இந்த மாதிரி தான் உட்கார்ந்து இருக்கும் போது ஒரு நபர் தயாரிப்பாளர் கிட்ட ஒரு வருஷமா கதை சொல்லிட்டு இருந்தாரு.

-விளம்பரம்-
KPY Champions

என்ன ஒரு சாபம்?! ?? கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் #GrandFinale – நாளை மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KPYChampions

Vijay Television ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಫೆಬ್ರವರಿ 1, 2020

அவர் படம் இப்படி எடுக்கலாம், அப்படி எடுக்கலாம், ரோப்புல தொங்குற மாதிரி ஆக்ஷன் படம் எடுக்கலாம் என்று கதை சொல்லி இருக்காரு. தயாரிப்பாளரும் கதையை கேட்டு சூப்பர் தம்பி, இப்படி பண்ணலாம் என்றார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் நான் உன்னிடம் சும்மா தான் தம்பி கதை கேட்டேன். நீ கிளம்பு அப்படின்னு சொல்ல அவரும் சரினு சொல்லிட்டு வந்துடறாரு. அப்புறம் பிரெண்ட்ஸ் கூட உட்கார்ந்து அவர் பேசிட்டு இருக்காரு. அப்ப அவங்க பிரண்ட்ஸ் நீ என்ன தான் இருந்தாலும் ஒரே ஒரு வார்த்தையாவது அவர கேட்டு வந்து இருக்கனும் என்று சொல்லுறாங்க.

- Advertisement -

இவருக்கு உடனே கோவம் வந்தது. அப்புறம் தயாரிப்பாளர் வீட்டுக்கு போய் ஏய், தயாரிப்பாளர் வெளியே வாயா என்கிறார். என்ன தம்பி இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க, சத்தம் போடாத பான்னு சொல்றாரு. என்ன நீ எல்லாம் ஒரு தயாரிப்பாளரா என்று கேக்கிறாரு. நீ எல்லாம் அடுத்த ஜென்மத்துல பாம்பா பிறந்த கூட உன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன்னு சொன்னார் என்று ஜீவா கூறினார். இந்த மாதிரி இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த இயக்குனர் யார்? என்பது குறித்து ஜீவா எதுவும் கூறவில்லை.

தற்போது ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள படம் “சீறு”. இந்த படத்திற்கு டி. இமான் அவர்கள் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா அவர்கள் “83” என்ற ஒரு படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் ரிலீஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வாமாக தகவல்கள் வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement