சிவகார்த்திகேயன், ரஜினிக்கு திருநங்கை ஜீவா சுப்ரமணியம் வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான திருநங்கைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா சுப்பிரமணியம். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த தர்மதுரை என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் ரஜினியின் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் ஒரு பாடலில் நடனமாடியிருந்தார். அதற்குப் பின் இவர் குலுகுலு, சூழல் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறுசிறு இடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதிக்க முடியவில்லை.
குட் டே படம்:
தற்போது இவர் குட் டே என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அரவிந்த் இயக்கியிருக்கிறார். 96 படத்தில் பிரேம் குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றி இருந்த பிரித்விராஜ் ராமலிங்கம் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

விழாவில் ஜீவா சுப்ரமணியம்:
இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பட குழுவினர் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை ஜீவா சுப்ரமணியம், இந்த படத்தில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நிச்சயமாக அந்த கதாபாத்திரம் உங்கள் எல்லோருக்குமே பிடிக்கும்.

ஜீவா சுப்ரமணியம் சொன்னது:
இந்த படமும் எல்லோருக்கும் பிடிக்கும். அதேபோல் பலருமே என்னிடம், நீங்கள் சேலை- சுடிதாரில் தான் நடிக்கிறீர்கள். ஏன்? என்றெல்லாம் கேட்கிறார்கள். எனக்கு சேலை என்றால் ரொம்ப பிடிக்கும். என் பெண்மையை உணர்ந்த போது நான் அணிந்த முதல் உடை சேலை தான். அதனால் தான் நான் எங்கு போனாலும் சேலையை தான் அணிந்து செல்வேன். எந்த கதாபாத்திரமாக கொடுத்தாலுமே என்னால் நடிக்க முடியும். வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என் திறமையை காண்பிப்பேன்.

ஜீவா சுப்ரமணியம் கோரிக்கை:
சிவகார்த்திகேயன் அண்ணா, ரஜினி சார் ஆகியோர் வெளியாகும் படங்கள் எல்லாவற்றையும் பார்த்து பாராட்டுகிறார்கள். அதே போல் நாங்கள் நடிக்கும் படங்களையும் பாராட்டினால் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் அன்பு சப்போர்ட் எங்களுக்கு ரொம்பவே பெரியதாக இருக்கும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. எங்களுடைய படங்களுக்குமே ஆதரவு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.






