லேடி சூப்பர் ஸ்டார் என்பது நீங்கள் பண்ணது தான. நயன்தாரா குறித்து பேசிய நடிகர் ஜீவா.

0
19176
jeeva

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரயின் இளைய மகனான ஜீவா ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் தித்திக்குதே, ராம், டிஷ்யூம் என்று பல்வேறு படங்கள் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.மேலும் இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல இவர் நயன்தாராவுடன் இணைந்து திருவிழா என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜீவாவிடம் நயன்தாரா குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

Image result for Jeeva nayanthara"

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நயன்தாரா, தற்போது விஜய், அஜித், ரஜினி என்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாது தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் ஜீவா.

இதையும் பாருங்க : புது ஆண்டின் புது வரவு. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கு குவியும் வாழ்த்து.

-விளம்பரம்-

அந்த பேட்டியில் பங்கேற்ற ஜீவாவிடம் நீங்கள் நடித்ததிலேயே எந்த கதாநாயகியிடம் நீங்கள் ரொமான்டிக்காக நடித்திருந்தார்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ஜீவா திரிஷா நயன்தாரா சமந்தா என்று மூன்று நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு இருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய தொகுப்பாளனி நீங்களும் நயன்தாராவும் நடித்த படத்தில் இடம் பெற்ற பழைய சோறு பச்சை மிளகா என்ற பாடல் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன்பின்னர் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று மாறிவிட்டார் அதை பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா என்று கேட்டிருந்தார்.

வீடியோவில் 14 : 30 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

அதற்கு பதிலளித்த ஜீவா அது நீங்கள் (மீடியா) பண்ணது தானே. லேடி சூப்பர் ஸ்டார் என்று. அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார் தான். அவர் எப்போதும் சிறந்த நடிகையாக தான் இருந்து வருகிறார். அவருக்கு எப்போதும் பிரபலம் என்பது இருந்திருக்கிறது. லேடி சூப்பர்ஸ்டார் என்பது நீங்கள் அளித்திருக்கும் ஒரு பெயர் மட்டும் தான் என்று கூறியுள்ளார் ஜீவா. அதன் பின்னர் நீங்கள் எப்போதும் மறக்க முடியாத 3 வசனங்கள் குறித்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த ஜீவா, ஒரு கோட்டர் சொல்லு மச்சி, அப்புறம் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு பீலிங் மச்சி, அப்புறம் சாமிபுள்ளடா என்று கூறியுள்ளார் ஜீவா

Advertisement