சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர் ஈஸ்வர்-ஜெயஸ்ரீ. இவர்களுடைய குடும்ப பஞ்சாயத்து அனைவரும் அறிந்ததே. இருவருமே சின்னத்திரை சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ நடிகை மட்டுமில்லாமல் டான்ஸரும் ஆவர். இருவரும் சீரியலில் நடித்து இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இவர்களுடைய வாழ்க்கை சுமூகமாக போனது.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவருமே குழந்தை நட்சத்திரமாக படங்களில், சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருமே டான்ஸரும் ஆவார். இப்படி சந்தோஷமாகத்தான் இவர்களுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. பின் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை, கணவன் கொடுமைப்படுத்துகிறார் என்று நடிகையும், ஈஸ்வர் மனைவியும் ஆன ஜெயஸ்ரீ போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
ஜெயஸ்ரீ விவகாரம்:
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகிவிட்டது. அவர் குடிப்பார் என்று தெரியும். ஆனால், கடன் வாங்கி குடிப்பார், சுதாடுவார் என்றெல்லாம் தெரியாது. லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை எல்லாம் நான் தான் அடைத்துக் கொண்டு வருகிறேன். தேவதையை கண்டேன் தொடரில் நடிக்க ஆரம்பித்த உடனே தான் நடிகை மகாலட்சுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு என்னிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார்.
ஜெயஸ்ரீ-ஈஸ்வர் விவாகரத்து:
நான் கொடுக்க மறுத்தேன். அதனால் அவர் என்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார். குடித்துவிட்டு வந்து ரொம்ப அடிப்பார். இப்படி நாளுக்கு நாள் அளவில்லாமல் கொடுமை செய்து கொண்டிருந்ததால் தான் நான் போலீசில் புகார் கொடுத்தேன். பின் அவரையும் அவருடைய அம்மாவையும் போலீஸ் கைது செய்திருந்தார்கள் என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஈஸ்வர், தன்மீது எந்த தவறும் இல்லை. ஜெய ஸ்ரீ தான் தேவையில்லாத வேலை செய்கிறார் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். அதற்குப்பின் ஜெயிலில் இருந்து வந்த பிறகு இருவரும் விவாகரத்து விண்ணப்பித்திருந்தார்கள். அந்த சமயம் கோவிட் பிரச்சனை இருந்ததால் இவர்களுடைய வழக்கு நிலுவையில் இருந்தது.
ஈஸ்வர் அளித்த பேட்டி:
அதுமட்டுமில்லாமல் விவாகரத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்றால் சில செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஜெயஸ்ரீ கேட்டதாகவும் கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு முறைப்படி விவாகரத்து நடந்தது. இது தொடர்பாக ஈஸ்வர் வெளியிட்ட அறிக்கையில், நானும் ஜெயஸ்ரீயும் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டோம். முறைப்படியாக செட்டில்மெண்ட் எல்லாம் முடிந்து விட்டதால் நாங்கள் இருவரும் அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பப்படி வாழ தீர்மானித்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
ஜெயஸ்ரீ அளித்த பேட்டி:
இவரை அடுத்து நடிகை ஜெயஸ்ரீ, இந்த விவகாரம் பூதாகரமாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய அசிங்கங்கள் எல்லாம் நான் சந்தித்து இருக்கிறேன். விவாகரத்து முடிவாகி விட்டது என்று முடிவாகறதுக்கு பிறகு முறைப்படி செய்ய வேண்டிய சில விஷயங்களையும் செய்து தரணும் என்று கோரிக்கையை தான் நான் வைத்தேன். நீண்ட இழுவைக்கு பிறகு தான் இந்த விஷயங்கள் செய்து தரப்பட்டது. எல்லா பிரச்சனைகளுக்கும் விவாகரத்து முற்றுப்புள்ளி வைத்தது. அவர் சொன்ன விவாகரத்து விஷயம் நிஜம்தான். ஏற்கனவே இந்த விஷயம் மீடியாவில் போதும் போதும் என்ற அளவுக்கு பேசப்பட்டது. இன்னும் அது தொடர்பாக நான் எதற்கு பேச வேண்டும். நான் எந்த விஷயத்தையும் பற்றி பேச தயாராக இல்லை. இதை பத்தி பேசறதுக்கு எனக்கு எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறார்.