தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் கொடி கட்டி பறந்தவர். தனது கடைசி காலம் இளமையை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி படு பிசியாக இருந்து வந்த ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அவரது மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.மேலும், அவர் ரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உதவி ஆணையர் வேத் பூஷண் என்பவர் கூறியிருந்தார்.
நடிகை ஸ்ரீ தேவி மரணமடைந்த நாள் முதல் அவர் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளனர் என்று தொடர்ந்து தெரிவித்துவருகிறார். சமீபத்தில் இது பற்றி அவர் தெரிவிக்கையில் ” ஸ்ரீதேவி இறப்பிற்கான காரணம் அவர் தண்ணீர் தொட்டியில் மூச்சி திணறி இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது நுரையீரலில் எந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது என்று குறிப்பிடப்படவில்லை.
அந்த விவரத்தை கேட்ட போதும் அதனை கூற துபாய் போலீசார் தர மறுத்து விட்டார்கள்” என்று கூறியிருந்தார். இப்படி ஸ்ரீதேவி மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு தெரியாமல் இருந்தாலும் அவரை பற்றிய நினைவுகள் இன்றும் மறவாமல் தான் இருந்து வருகிறது. ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இருவருமே பாலிவுட்டில் நடிகைகளாக திகழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இவர்கள் இருவருமே ஸ்ரீதேவி அளவிற்கு பிரபலமடைய முடியவில்லை. இதில் ஜான்வி கபூர் ஆவது தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால், குஷி கபூருக்கு பட வாய்ப்புகள் அப்படி அமையவில்லை. இந்த நிலையில் இன்று ஸ்ரீதேவியின் 59வது பிறந்தநாளில் அவரது குடும்பத்தினர் ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. ஒவ்வொரு நாளும் உங்களை நாங்கள் மிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி சிறுவயதில் ஸ்ரீதேவியுடன் தான் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதையடுத்து ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட ஒரு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.