தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார்.
மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். இப்படி ஒரு நிலையில் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது.
மீனா கணவருக்கு ஏற்பட்ட பிரச்சனை :
இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இதனால் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.
இறுதி வரை கிடைக்காத உடல் உறுப்பு :
மீனாவின் கணவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்து இருந்தால் அவரை காப்பற்றி இருந்து இருக்கலாம். ஆனால், கடைசி நேரம் வரை எவ்வளவோ போராடியும் அவருக்கு மாற்று நுரைஈரல் கிடைக்கவில்லை. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று உலக உடல் உறுப்பு தான நாளை முன்னிட்டு மீனா உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
மீனாவின் உருக்கமான பதிவு :
ஒரு உயிரை காப்பற்றுவதை விட வேறு எதுவும் சிறந்த விஷயம் கிடையாது. உயிரைக் காப்பாற்றும் அப்படி ஒரு உன்னதமான விஷயம்தான் உடல் உறுப்பு தானம். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வரும் பலருக்கு மறு வாழ்க்கை கொடுக்கும் ஒரு வரம். அதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்து இருக்கிறேன். என்னுடைய கணவருக்கும் யாராவது அப்படி செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கும். ஒரு உடல் உறுப்பு தானம் எட்டு உயிர்களை காப்பாற்றும்.
உடல் உறுப்பு தானம் :
அனைவருமே உடல் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது தானம் வழங்குபவருக்கும் பெரிவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருக்கும் விஷயம் கிடையாது. இது குடும்பம், நண்பர்கள். உற்றார் உறவினர்கள் போன்ற அனைவரையும் சம்பந்தப்பட்டது. இன்று நான் என்னுடைய உடல் உறுப்பை தானம் செய்ய உறுதிமொழி எடுத்து இருக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும்