ப்ரியா வாரீர் படத்தை பற்றி கேட்ட நிருபர்.!எரிச்சலடைந்து ஸ்ரீதேவி மகள் செய்த செயல்.!

0
913
priya-varrier
- Advertisement -

ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

ஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீர் ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மேலும், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடப்பதுபோல காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர்.

இதையும் படியுங்க : ஏசியா நெட் விருது விழாவில் ஆடையால் அசிங்கப்பட்ட ப்ரியா..! கலாய்த்த ரசிகர்கள்.! வீடியோ இதோ

- Advertisement -

மேலும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தின் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார். ஆனால், படத்தின் இயக்குனரோ ஸ்ரீதேவி என்ற பெயர் நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் தான் சொந்தமா நான் தலைப்பை மாற்ற மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்துகொண்டார். அவரிடம் இந்த படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது இந்தக் கேள்வியால் வெறுப்படைந்த அவர், காது கேட்கவில்லை என்றார்.
மீண்டும் அந்தப் படம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவரது, போதும் எதுவும் கேட்க வேண்டாம் என்று சொன்னார். இதையடுத்து எந்தப் பதிலும் சொல்லாமல், மேடையை விட்டு சென்றார் ஜான்வி.

-விளம்பரம்-
Advertisement