வெளிநாட்டு ஹோட்டலில் புகை பிடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் ஜீவா..

0
1073
- Advertisement -

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “83”. இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை ஆகும். இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதையாகும். இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

கபில்தேவ் ஆக இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்து உள்ளார். ஸ்ரீகாந்த் ஆக ஜீவா, மதன்லாலாக ஹர்டி சாந்து, சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் தீபிகா படுகோன், சாகிப் சலீம், ஹார்டி சந்து உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று தான் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட கமலஹாசன், கபில்தேவ், ஸ்ரீகாந்த், ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் ஜீவா அவர்கள் இந்த படத்தின் போது நிகழ்ந்த அனுபவங்களை குறித்து பேசினார். அதில் கூறிய அவர் கூறியது, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன் என்று சொல்லும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. விஷ்ணு மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது. முதலில் ஸ்ரீகாந்த் சாரின் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொல்லும் போது நான் அதிர்ச்சியடைந்தேன். சொல்லப்போனால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. கபில்தேவ் அவர்களின் தர்மசாலாவில் நடந்த நிகழ்வின் போது ஸ்ரீகாந்த் சாரை பற்றி என்னிடம் நிறைய சொல்லி இருக்கிறார்கள்.

அது எனக்கு இன்னும் அதிக பயத்தையும், டென்சனையும் ஏற்படுத்தியது. மேலும், நம்மால் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமோ? அந்த அளவிற்கு நமக்கு திறமை இருக்கிறதா? என்று பல கேள்விகள் என் மனதில் தோன்றியது. ஒரு வழியாக தன்நம்பிக்கையோடு நான் படப்பிடிப்பிற்கு சென்றேன். ஸ்காட்லாந்தில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முதல் நாளில் எனக்கு ஒரு வினோதமான சூழ்நிலை ஏற்பட்டது என்று சொல்லலாம். அது முதல் நாள் படப்பிடிப்பின் போது நான் ஸ்ரீகாந்த் சார் போல புகைப்பிடிக்க பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. அப்போது தற்செயலாக புகை அலாரம் ஹோட்டல் முழுவதும் அடித்தது.

-விளம்பரம்-

பின் நாங்கள் அனைவரும் ஹோட்டலிலிருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக இருந்தோம். இது என்னால் மறக்க முடியாது. நடிகர் ரன்வீர் சிங்கை பத்தி சொல்லவே வேண்டாம் உங்கள் எல்லோருக்குமே தெரியும். அந்த அளவிற்கு திறமை மிக்க மனிதர். இவருடைய பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும், மிகப்பெரிய நடிகர். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதன் மூலம் நான் நாடு முழுவதும் நண்பர்களை பெற்று உள்ளேன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

Advertisement