ஜித்தன் ரமேஷ் என்ன ஆனார் தெரியுமா..? அவரா இது.? புதிய கெட்டப்பில் வெளியான புகைப்படம்.!

0
580
Jithan-ramesh

இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.

Ramesh

நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரான இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை. தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது.

2011 ஆம் ஆண்டு வெளியான “ஓஸ்தி ” படத்திற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு மூலம் ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

Jithan Ramesh

Actor Ramesh

நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் 2” படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை. அதன் பின்னர் நடிகர் ஜித்தன் ரமேஷ் என்னவானார் என்றே தெரியவில்லை. சமீபத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷின் புகைப்படங்கள் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். நீங்களே பாருங்கள் அவர் எப்படியுள்ளார் என்று.