வாய்ப்பில்லாமல் தவித்து வந்த ஜே.ஜே பட நடிகர் – கட்சியில் பொறுப்பு கொடுத்த அண்ணாமலை. கேசவ விநாயகத்துக்கு நன்றியாம்

0
410
sasi
- Advertisement -

தமிழ் நாட்டில் அரசியல் காட்சிகளில் ஒன்றான பாஜகவில் மற்ற கட்சி நபர்களை தவிர்த்து பல சினிமா பிரபலங்கள் சில முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மற்றொரு சினிமா துறையை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் பாஜக கட்சியில் முக்கியமான பொறுப்பில் சேர்ந்துள்ளார். அது வேறுயாரும் இல்லை ஜேஜே, ஆனந்தம், திருப்பாச்சி போன்ற படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த நடிகர் சசிகுமார் சுப்ராமணிக்கு தான் பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சினிமாவும் பாஜகவும் :

தமிழ் நாட்டில் குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரையும் பாஜக தன்னுடைய கட்சியில் சேர்த்து வருகிறது, அந்த வகையில் காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், மதுவந்தி, நமிதா, கவுதமி, ராதாரவி, இயக்குனர் பேரரசு போன்ற சினிமா பிரபலங்கள் கட்சியில் முக்கியமான நிர்வாக பொறுப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக அரசியலில் இருந்து வந்த காயத்ரி ரகுராம் கடந்த சில மதங்களுக்கு முன்னே சூர்யா சிவா மற்றும் டெய்சி விவகாரத்தில் சிக்கி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

பதவியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி :

இந்நிலையில் காயத்ரி ரகுராம் வகித்து வந்த வெளிநாட்டு மற்றும் அண்டைநாட்டு மாநில தமிழ் வளர்ச்சி பதவியும் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில தமிழ் வளர்ச்சி பதவியை இசையமைப்பாளர் தினாவிற்கு வழங்குவதாகவும், அதோடு மாநில துணை தமிழ் வளர்ச்சி தலைவராக ஆனந்த் அய்யாசாமி நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபாத்தில் அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.

மாநில தலைவரான இயக்குனர் பேரரசு:

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தமிழ் நாட்டில் வெளிமாநில மற்றும் அண்டைநாட்டு மாநில தமிழ் வளர்ச்சி தலைவராக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பேரரசு நியமிக்கப்படுவார் என்றும், துணை மாநில தமிழ் வளர்ச்சி தலைவர்களாக சுறா.என்.முரளித்தாஸ், சுகு பூப்பாண்டியன், எஸ்.வி. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட மூவரும் நியமிக்கப் படுவார்கள் என்று தமிழ் நாட்டில் பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அரசியலில் களமிறங்கிய சசிக்குனார் :

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், கமலஹாசன், சரத்குமார், மாதவன், பிரகாஷ் ராஜ், சுந்தர் சி போன்ற நடிகர்கள் நடித்த படங்களில் துணை கதாபாத்திரமாகவும், சீரியல்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணசித்திர நடிகராகவும் நடித்திருந்த சசிகுமார் சுப்ரமணியை பாஜக கட்சியின் துணை மாநில பொதுச் செயலாளர் பதவியில் நியமித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நன்றி தெரிவித்த சசிகுமார் சுப்ரமணி :

இந்நிலையில் தனக்கு பாஜகவில் முக்கிய பதவியை வழங்கியதற்கு நன்றி சொல்லும் வகையில் நடிகர் சசிகுமார் சுப்ரமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் தனக்கு தமிழக பாஜக கட்சியில் துணை பொதுத்திச்செயலாளர் பதவி வழங்கியதற்கு தன்னுடைய மனமார்ந்த நன்றி எனவும், என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கிய தமிழ் நாடு பாஜக தலைவர் ஸ்ரீ அண்ணாமலை அவர்களுக்கு மிக்க நன்றி என்று அந்த பதிவில் நடிகர் சசிகுமார் சுப்ரமணி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Advertisement