பிரபல நடிகர் ஜான் கொக்கைன் மனைவி பூஜாவிற்கு குழந்தை பிறந்து இருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும் சமீப காலமாகவே அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படங்கள் எல்லாம் பட்டைய கிளப்பி இருக்கிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் வலிமை.
இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியார் நடித்து இருந்தார். இந்த படத்தையும் வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், இப்படத்துடன் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.இந்த படத்தில் இதுவரை கண்டிராத கெட்டப்பில் அஜித் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். மேலும், வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருந்தார். இந்த படத்தில் வங்கியின் உரிமையாளராக நடித்தவர் ஜான் கோகைன்.
இவர் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருந்த சர்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.இதனை அடுத்து துணிவு படத்தில் ஜான் கோகைன் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பூஜா இராமச்சந்திரன் ஏற்கனவே ss music தொகுப்பாளர் கிரேக்கை திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ஜான் கோகைன் பார்ட்டி வைத்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ஜான் கோகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். பின் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் கர்ப்பமாக இருக்கும் போது இவர் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பூஜா தனக்கு குழந்தை பிறக்க இருபதை முன்னிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கேக் வெட்டி கொண்டாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று பூஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த விஷயத்தை ஜான் கொக்கன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது.