‘விஜய்யை நான் அவமதிச்சிருக்க கூடாது’ – துணிவு பட நடிகர் பிர்லா போஸ் வேதனை.

0
866
Birla
- Advertisement -

விஜயை நான் அவமதித்திருக்கக் கூடாது என்று பிர்லா போஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பிர்லா போஸ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் ஒரு மாடலும் ஆவார். சின்னத்திரை வருவதற்கு முன்பே இவர் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய சொந்த ஊர் தர்மபுரி. இவர் ராம் படத்தில் தான் முதன் முதலாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அதற்கு பின்பு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் காவியா வர்ஷினி, பாரதி கண்ணம்மா, ஆதிபராசக்தி, எங்கள் வீட்டுப் பெண், வள்ளி, திருமதி செல்வம், கல்யாண பரிசு, சந்திரலேகா, கோலங்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் என்றாலே பலரும் பிர்லா போசை தான் பரிந்துரைப்பார்கள்.

- Advertisement -

காரணம், போலீசுக்கு ஏற்ற உயரமும், மிடுக்கான தோற்றமும், கம்பீரமும் அவரிடம் இருக்கும். இதனால் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து பிர்லா போஸ் கூறி இருந்தது, எனக்கும் விஜய் சாருக்கும் நல்ல நட்பு இருந்தது. அவர் அவ்வளவு எளிதாக யாரிடம் கனெக்ட் ஆக மாட்டார். ஆனாலும், அவ்வளவு எளிதில் அவர்களை விட்டு பிரிய மாட்டார். ஆனால், அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு இடத்தில் தவறான புரிதல் ஏற்பட்டது.

சிவகாசி படத்தின் சூட்டிங் போது பேரரசு சார் என்னை வர சொல்லி இருந்தார். நான் போனேன். விஜய் சார் உடன் இருக்கும் நபர் ஒருவர் அங்கு இருந்தார். அந்த நபர் தான் சுக்கிரன் படம் பண்ணும் போது நான் விஜய் சார் கூட இருக்கேன் என்று என்னிடம் வந்து அறிமுகப்படுத்தி பேசினார். இதனால் சிவகாசி செட்டில் அவர் இருந்ததால் அவரை பார்த்து என்ன சார் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டேன். உடனே அவர், வாய்ப்பு வேணும்னா எதுக்கு இங்கே வர்றீங்க? ப்ரொடியூசர் ஆபீஸ்ல போய் பாருங்க என்று டக்குனு கூறிவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை.

-விளம்பரம்-

அப்போது எனக்கு அவ்வளவு மெச்சூரிட்டி கிடையாது. இதனால் எங்களுக்குள் ஒரு வாக்குவாதம் வந்துவிட்டது. அதன் பின் உதவியாளர் என்னை உள்ளே அழைத்து சென்றுவிட்டார். மேலும், நான் கோபத்தில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது விஜய் சார் ஓபனிங் சாங் முடித்துவிட்டு ஏன் வெயிலில் நிற்கிற உள்ள வா என்று அழைத்தார். ஆனால், நான் அதற்கு நடந்த மோதலை மனதில் வைத்துக்கொண்டு தேவையில்லாமல் விஜய் சார் பேசியதற்கு நான் எந்த ரெஸ்பான்ஸும் பண்ணவில்லை. அதை நினைத்தால் இப்பவும் குழந்தைத்தனமாக இருக்கு.

அவ்வளவு பெரிய நடிகர் நான் வெயிலில் இருக்கிறேன் என்று ஏசி அறைக்கு என்னை அழைத்தார். நான் அவருடன் இருந்தவர் போட்ட சண்டையை மனதில் வைத்துக்கொண்டு அப்படி நடந்திருக்கக்கூடாது. இத்தனைக்கும் எங்களுக்குள் சண்டை நடந்தது அவருக்கு தெரியாது. அவரிடம் சொல்லி இருந்தால் ஆவது அவருக்கு தெரிந்திருக்கும். இதுவரை இந்த விவகாரம் வெளியே தெரியாது. ஒருவேளை இந்த பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டால் எனக்கு சந்தோஷம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement