அறிமுக இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகராக சோமசுந்தரம் என்பவர் நடித்திருந்தார். மேலும், இதில் இசை என்ற கதாபாத்திரத்தில் காயத்ரி என்பவர் நடித்திருந்தார்.
1990 இல் கேரளாவில் பிறந்தார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க துவங்கினார். கேரளாவில் பிறந்தாலும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர், தமிழில் முதன் முதலில் அறிமுகமான படம் ‘ஜோக்கர்’ அந்த படத்திற்கு அந்த படத்திற்கு பின்னர் சமீபத்தில் வெளியான மேற்கு தொடர்ச்சி மலை படத்திலும் நடித்திருந்தார். தேசிய விருது வாங்கிய படத்தில் நடித்த நடிகைகே சினிமாவில் அதிக வாய்ப்பில்லாதது கொஞ்சம் வருந்ததக்க விஷயம் தான்.
இந்த நிலையில் இவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறாராம். ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் வருகிற மே 19ம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.