வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை.

0
2501

நடிகர் சூர்யாவுடன் திருமணம் ஆன பின்னர் ஜோதிகா நடிப்பதை நிறுத்தினார். அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 36 வயதனிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

balan

அதன்பின்னர் மகளிர் மட்டும் ,நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்த ‘துமாரி சுலு’ என்ற சூப்பர்ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

ஒரு வானொலி நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியில் சேரும் பெண் அதன்பின்னர் ஏற்படும் துன்பங்களில் இருந்து எப்படி போராடி மீண்டு வருகிறார் என்பது தான் கதை.

joo

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை ‘மொழி’ படத்தின் இயக்குனர் ராதாமோகன் இயக்குகிறார்.