பிரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யாவிற்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான். வெளியான போட்டோ ஷூட்.

0
109552
friends
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், சூர்யா. இவர்கள் இருவரும் சினிமா உலகில் வளர்ந்து வரும் காலங்களில் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளார்கள். அந்த வகையில் இவர் இருவரும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான படம் “பிரண்ட்ஸ்”. இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆகும். இந்த படத்தை அப்பச்சன் அவர்கள் தயாரித்து இருந்தார்கள். மேலும், இந்த பிரண்ட்ஸ் படம் மலையாள திரைப்படத்தை தழுவி வந்தது. இந்த படத்தில் தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி, வடிவேலு, ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

இந்நிலையில் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் தேவயானி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவும், விஜயலட்சுமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை சுவலக்ஷ்மியும் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் போது எடுத்த போட்டோ ஷுட் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. முதலில் தேவயாணி கதாபாத்திரத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகாவிடம் தான் பேசப்பட்டது. அதன் பின்னர் காரணம் என்னவென்று தெரியவில்லை இந்த படத்தில் இருந்து ஜோதிகா விலகி விட்டார். அதற்கு பிறகு தான் நடிகை தேவயானியை ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை ஜோதிகா. இவருடைய படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் தான். திருமணத்திற்கு பிறகு இவர் கொஞ்சம் சினிமா உலகில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிகை ஜோதிகா பட்டையை கிளப்பி வருகிறார். பெரும்பாலும் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி, ஜாக்பாட், தம்பி போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-
Related image

அதே போல் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை விஜயலட்சுமி நடித்து இருந்தார். ஆனால், விஜயலட்சுமிக்கு பதில் முதலில் சுவலட்சுமி இடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின் என்ன காரணம் என்று தெரியவில்லை இந்த படத்தில் இருந்து நடிகை சுவலட்சுமி விலகி விட்டார். அதற்குப் பிறகு தான் நடிகை விஜயலட்சுமி அவர்கள் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. நடிகை சுவலட்சுமி அவர்கள் 90,20 காலங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது.

Image result for friends movie tamil

இவர் தெலுங்கு, தமிழ், வங்காளம், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் என்ற தொடரில் நடித்து இருந்தார். இதற்கு பிறகு இவருக்கு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு இவர் சினிமா உலகிலிருந்து விலகி விட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை ஜோதிகா–சுவலக்ஷ்மி நடிப்பதாக இருந்த பிரண்ட்ஸ் படத்தின் போட்டோஸுட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertisement