சட்டம் சரியா இருந்திருந்தா சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் ஜெயில்தான் – காங்கிரஸ் எம்.பி. கடும் விமர்சனம்.

0
482
Seeman
- Advertisement -

ராஜிவ் காந்தி குறித்து பேசிய சீமானை பாலியல் குற்றவாளி என்று காங்கிரஸ் எம் பி பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான நேற்று அவரது மகன் ராகுல் காந்தி தனது தந்தையை நினைவு கூறும் வகையில் ட்வீட் ஒன்றைபோட்டிருந்தார். அதில் “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார்.

-விளம்பரம்-

நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்.” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் ராகுல் காந்தி. இப்படி ஒரு நிலையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் நேற்று சீமான் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பாக கேள்வியை கேட்டிருந்தனர்.

இதையும் பாருங்க : கல்யாணம் ஆனதை மறைத்து 19 வயதில் திருமணம் செய்து ஏமாற்றிய கணவர், ஆட்டோ ஓட்டி இரண்டு மகள்களை காப்பற்றி வரும் வல்லவன் பட நடிகை.

- Advertisement -

ராஜிவ் காந்தி குறித்து சீமான் :

அதற்கு பதில் அளித்த சீமான் ‘“ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவரும் 400 கோடி பீரங்கி ஊழலில் சம்பந்தப்பட்டவர்தான். ஒரு நாட்டின் அதிபர் ஒரு ராணுவத்தை அனுப்பி என் இனத்தில் 26,000 பேரை அழித்து உள்ளார் ராஜிவ் காந்தி. ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? என்று கூறி இருந்தார் சீமான்.

ஜோதிமணி பதிலடி :

சீமானின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் எம் பி ஜோதிமணி பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
seeman

சீமான் – விஜயலக்ஷ்மி விவகாரம் :

ஏற்கனவே சீமான் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார் நடிகை விஜயலட்சுமி ‘ சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள தற்போது மறுக்கிறார் என்று புகார் செய்திருந்தார். சீமான் குடும்பம் நடத்தியதாக பல ஆதாரங்களை வைத்து உள்ளதாக கூறி இருந்தார் நடிகை விஜயலட்சுமி. பின் சீமானுடன் இருந்த வீடியோக்களையும் இவர் வெளியிட்டு இருந்தார். ஆனால், அந்த பிரச்சனை நாள் போகப்போக மறைந்து விட்டது.

தற்கொலைக்கு முயன்ற விஜயலக்ஷ்மி :

சீமான் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று சோசியல் மீடியாவில் விஜயலட்சுமி தற்கொலை செய்ய முயன்ற வீடியோவை 2020 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிட்டு இருந்தார். பின் விஜயலட்சுமியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும், விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து எனக்கு நியாயம் வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார் விஜயலட்சுமி.

Advertisement