ஜெயம் ரவி ஆர்த்தியின் பிரிவிற்கு இதுதான் காரணம் என்று பிரபலம் ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுடில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள்.

இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்தி தான் ரசிகர்களுக்கு பேரிடியாக இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி- ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஜெயம் ரவி- ஆர்த்தி சர்ச்சை:
அதோடு சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பெருமையாக பேசி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்குக் காரணம், ஆர்த்தி பயோவில் இருக்கும் தன்னுடைய கணவருடைய ஐடியை நீக்கி இருக்கிறார். அதேபோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அனைத்தும் நீக்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பிரிவுக்கு காரணம்:
இன்னொரு பக்கம், ஜெயம் ரவி ஆர்த்தியின் பிரிவிற்கு பல காரணங்களை சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, ஜெயம் ரவியின் அடுத்த படத்தை அவருடைய மாமியார் சுஜாதா தான் தயாரிக்க இருப்பதாக இருந்தது. அதற்காக ஜெயம் ரவி, அவரிடம் கோடி கணக்கில் கேட்டதற்கு சுஜாதா தர மறுத்திருக்கிறாராம். இதனால் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் ஆர்த்தியின் அம்மா சுஜாதாவிற்கு ஷங்கர் என்ற வளர்ப்பு மகன் இருக்கிறார்.
ஜெயம் ரவி-ஆர்த்தி சண்டை:
அவர் தான் சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் உடைய பணிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சங்கர் சொல்வதை ரவி கேட்க வேண்டும் என்று சுஜாதா ஆர்டர் போட்டிருக்கிறார். இதனால் தான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஈகோவாக மாறி ஆர்த்தி, ஜெயம் ரவி இடையே சண்டை ஏற்பட்டு பிரிகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில், வலைப்பேச்சு அந்தணன் ஜெயம் ரவி வேறு ஒரு நடிகை உடன் தொடர்பில் இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. ஆனால், அது முற்றிலும் பொய். அவர் அந்த மாதிரி நபர் கிடையாது. அவர்கள் சண்டையே வேறு.
https://www.youtube.com/watch?v=WPskJse80jU
பிரபலம் அளித்த பேட்டி:
ஜெயம் ரவி மாமியார் வீட்டில் மகனாக இருக்க நினைத்தார். ஆனால், அவர்கள் தங்களுடைய கைக்குள் வைத்து ஆட்டி வைக்க முயற்சித்தார்கள். வேறு தயாரிப்பில் கூட ஜெயம் ரவி நடிக்க கூடாது என்று சொல்லும் அளவிற்கு கட்டளை எல்லாம் போட்டார்கள். இன்னொரு பக்கம் மனைவி ஆர்த்தி, எதற்கெடுத்தாலும் ஜெயம் ரவி மீது சந்தேகம் படுவார். சூட்டிங் ஸ்பாட்டில் ஜெயம் ரவிக்கு போன் செய்தால் எடுக்க வேண்டும். அப்படி அவர் போன் எடுக்கவில்லை என்றால் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள இயக்குனர், உதவியாளர் என எல்லோருக்குமே போன் செய்து அவர் என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார்? என்று விசாரிப்பார். அவர்களும் போன் எடுக்கவில்லை என்றால் சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஆர்த்தி சென்று விடுவார். அந்தளவிற்கு சந்தேகம். ஒரு கட்டத்திற்கு மேல் ஜெயம் ரவியால் இது எல்லாம் தாங்க முடியவில்லை. அதனால் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது என்று கூறியிருக்கிறார்.






