பாலய்யா கிட்ட அப்படி பண்ணா தான் எந்த டார்ச்சரும் இருக்காது – பிரபலம் சொன்ன விஷயம்

0
412
- Advertisement -

பாலைய்யா குறித்து பிரபலம் ஒருவர் கொடுத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா.

-விளம்பரம்-

இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இவருடைய கருத்துக்கள் மற்றும் செய்திகள் மூலம் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

- Advertisement -

தொடர் சர்ச்சையில் சிக்கும் பாலகிருஷ்ணா :

செல்பி எடுக்க வரும் ரசிகர்களை தாக்குவது, அவர்களின் செல்போனை தூக்கி எறிவது, குழந்தையை அடித்து போஸ் கொடுக்க சொல்வது என சர்ச்சைகளில் மாட்டிய இவர் சமீபத்தில் கூட நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். தற்போது அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி. இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கிருஷ்ணா சைதன்யா எழுதி இயக்கி இருக்கிறார்.

மேடையில் பாலகிருஷ்ணா செய்தது:

நேஹா ஷெட்டி, அஞ்சலி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்தினுடைய ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றிருந்தது. இதில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் படக்குழுவினர் எல்லோருமே நிற்கும் போது தள்ளி நிற்க பாலகிருஷ்ணா சொல்லி இருக்கிறார். எல்லோரும் கொஞ்சம் மெதுவாக நகர்ந்து இருக்கிறார்கள். உடனே வேகமாக அவர் அஞ்சலியை மேடையிலேயே தள்ளி இருக்கிறார். அஞ்சலியும் சிரித்துக் கொண்டு அதை சமாளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

இதை பார்த்த பலரும் பாலகிருஷ்ணா செயலை கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதை அடுத்து பாலைய்யா குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் அவர் நடிகைகளிடம் எல்லை மீறி நடந்து கொள்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டியில், பாலையா நடிகைகளிடம் எல்லை மீறி தான் நடந்து கொள்கிறார். ஆனால், அவர் நயன்தாராவிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை.

பாலைய்யா குறித்த சர்ச்சை:

பாலைய்யா -நயன்தாரா இருவரும் இணைந்து நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த மாதிரி எந்த ஒரு தர்மசங்கடம் நயன்தாராவிற்கு ஏற்பட்டது கிடையாது. பாலைய்யா,தன்னை மதிக்க வேண்டும் என்று நினைப்பார். படப்பிடிப்பு சென்ற உடனே அவர் காலில் விழுந்து வணங்கி விட்டால் போதும் எல்லாமே முடிந்து விடும். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த ஒரு டார்ச்சர் இருக்காது. நிம்மதியாக அவருடன் நடித்து விட்டு வரலாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement