இப்படி வாழ்வதுக்கு செத்துடலாம் – புயல் பாவங்கள் வீடீயோவால் கடுப்பான நியூஸ் சேனல் பிரபலம்.

0
2015
gopi
- Advertisement -

யூடியூபில் எப்போதும் ட்ரெண்டாக இருந்து இளம் ரசிகர்களை காரணத்தை சில சேனலகளில் மிக முக்கியமான இரண்டு சேனல் தான், ‘மெட்ராஸ் சென்ட்ரல் மற்றும் ‘எரும் சாணி’. இந்த இரண்டு குரூப் தான் சளிக்காமால் மக்களை என்டர்டெய்ன் செய்து கொண்டுவந்தது. இதில்’மெட்ராஸ் சென்ட்ரல்’ என்னும் யூடியூப் சேனல் தெரியாத ஒருவர் தற்போது இருக்க முடியாது. அந்த அளவிற்கு சமூக வலைதள வாசிகளை தங்கள் யூட்டிப் சேனல் மூலம் கண்ட்ரோல் செய்து வைத்திருந்தனர் ‘கோபி -சசுதாகர்’ இணை. கடந்த சில வருடமாக மெட்ராஸ் சென்ட்ரல் சேனாலுக்காக பல வீடியோக்களை உருவாக்கி பிரபலம் ஆகி வந்தனர் இருவரும் மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் இருந்து வெளியேறி இருவரும் ‘Paridhabangal’ என்னும் இன்னொரு யூடியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-

இந்த ‘Paridhabangal’ யூடுயூப் சேனலிலும் இவர்கள் போடும் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிடுகிறது. அதே போல இவர் பெரும்பாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை பற்றி தான் வீடியோ போடுவார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய ‘நிவர்’ புயல் பற்றி வீடியோ ஒன்றை போட்டிருந்தனர். வழக்கம் போல அந்த வீடியோவும் பெரும் வைரலானது. மேலும் இந்த வீடியோ, புயல் வந்தால் மீடியாக்கள் சில எப்படி மிகைப்படுத்தி காட்டுகின்றன என்பதை கேலியாக சித்தரித்து இருந்தனர்.

- Advertisement -

அதிலும் இந்த வீடியோவில் பேசிய கோபி தன்னை பழைய பரம்பரை செய்தியாளர் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதிய தலைமுறை கேமரா மேனான மதன் கார்த்திகேயன் தனது முகநூல் பள்ளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, அடுத்தவனை சிரிக்க வைக்க ஒருவனை மட்டும் வைத்து புறம் கூறி சிரிக்க வைப்பது எந்த நன்மையும் ஏற்படாது. நீங்களும் நாலு சுவற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

அதையும் பார்த்து நான்குபேர் சிரிக்கின்றனர் தன் குடும்பத்தை மறந்து மழை, வெயில், புயல், என்று பாராமல் தன் குடும்பத்தையும் மறந்து ஒவ்வொரு செய்தியாளரும் ஒளிப்பதிவாளரும் களத்தில் நின்று செய்தி சேகரிக்கிறார்கள். நீங்கள் என்ன என்றால் அடுத்தவனை வைத்து பலித்து நிகழ்ச்சி எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் அடுத்தவன் சிரித்தால் தான் உங்களுக்கு சோறு. இந்தப் புயல் அந்த வேகத்திற்கு கரையை கடந்து இருந்தால் முன்னாடியும் பின்னாடியும் மூடிக்கொண்டு நீங்கள் வீட்டிலேயே இருந்து இருப்பீர்கள். தற்போது இந்த புயலால் சென்னையில் எவ்வளவு பாதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா எத்தனை குடும்பங்களை பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர் என்பது தெரியுமா.

-விளம்பரம்-

இதேபோன்றுதான் காஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னமும் மீள முடியாமல் இருக்கிறது. நீங்கள் என்ன உதவி செய்திருக்கிறீர்கள் இவர்களுக்காக. நீங்கள் மற்றவர்களையும் சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு நீங்கள் அதில் எத்தனை லட்சங்கள் சம்பாதித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு சிலருக்கே தெரியும்.எங்களின் பணி மக்களின் பணி என்று குறிப்பிட்டதோடு இறுதியாக ஒரு திருக்குறளையும் பதிவிட்டு அதற்கு விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/madan.karthikeyan/posts/2145213432275228

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
மு.வ உரை:புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

Advertisement