பிரபல யூடியூபர் இர்ஃபான் குறித்து, பத்திரிக்கையாளர் பாண்டியன் பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபகாலமாக இர்ஃபான் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சினிமா நடிகர்களை விட ட்ரெண்டிங்கில் உள்ளவர்கள் யூடியூபர்கள் தான். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகர் இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளில் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
ஆனால், சமீப காலமாக இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது அது குறித்து பத்திரிக்கையாளர் பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். அதில், இர்ஃபானை பொறுத்தவரை அவர் ஆளும் கட்சி செல்லம். ஆளுங்கட்சி தான் இவரது எல்லாத் தவறுக்கும் காரணம். முதலில், அவரை எல்லா சுங்கச் சாவடிகளிலும் கார் ஓட்டிக்கொண்டு அவரே வீடியோ எடுத்துக் கொண்டு வருகிறார். அப்போது மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு வரும்போது, வண்டி ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார்.
இர்ஃபான் ஏற்படுத்திய விபத்து:
அப்போது பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு செய்யும் ஒரு வயதான மூதாட்டி இர்ஃபானின் கார் மோதி அடிபட்டு இருந்து விட்டார். அந்த அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து இருக்கணும். ஆனால், அங்கு அவர் நிற்க கூட இல்லை. வேறு காரில் ஏறி சென்றுவிட்டார். இன்று வரை இந்த விஷயத்தில் அவருக்கு எந்த தண்டனையும் கொடுக்கப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் கூட இறந்து போன தலித் மூதாட்டிக்கு இழப்பீடு கூட கொடுக்கவில்லை. இது பெரிய சர்ச்சையாக மாறிய பிறகு, திமுகவில் ஒரு பெரிய பெண் தலைவரை பார்த்து கையை காட்டுகிறார் . அவர் மூலம் இர்ஃபான் தப்பிவிட்டார்.
ஜெண்டர் ரிவில் பார்ட்டி:
அது மட்டும் இல்லாமல், பெண்கள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கும் சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது. இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை அறிவதற்குத் தடை விதிக்க காரணம் அதுதான். ஆனால், இர்ஃபான் என்ன சொல்கிறார். துபாய் போனால், குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்ளலாம் என அனைவருக்கும் வழிகாட்டி உள்ளார். இதனால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் சட்டத்தை இர்ஃபான் மீறி இருக்கிறார்.
தொப்புள் கொடி சர்ச்சை:
இதைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது, ஜவுளி கடையில் ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்துவது மாதிரி, தொப்புள் கொடியை வெட்டி இருக்கிறார். இப்போது போலீஸ் தேடும்போது ஜப்பானில் இருக்கிறார். இவர் கடத்தல் பேர் வழின்னு எல்லாரும் சொல்றாங்க. அவர் எங்கு போனாலும் நகையை வாங்கிக் கொண்டு போட்டுகிட்டு வரலாமே. காவல்துறை, சுங்கத்துறை, புலனாய்வுத்துறை இர்ஃபானை ஆராய வேண்டும். அமைச்சர் மா. சுப்பிரமணியன் அந்த மருத்துவமனையைச் சீல் வைத்திருக்க வேண்டும்
மருத்துவமனைக்கு சீல் வைத்திருக்கனும்:
தன் மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்க அனுமதித்து, பிரசவம் பார்க்க குறைவான கட்டணம் கேட்ட மருத்துவமனையில் தன் மனைவியை அனுமதித்து இருக்கிறார். சோழிங்கநல்லூரில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் நிவேதா அவர்களின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதோடு அந்த மருத்துவமனைக்குச் சீல் வைக்க வேண்டும். அந்த வீடியோவை பார்த்து எல்லாரும் தொப்புள் கொடியை கட் செய்ய கிளம்பிவிடுவார்கள். இந்தியா மன நோயாளிகள் நிறைந்த நாடு, அதனால் இர்ஃபான் ஜாலியாக இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்